வாலிபர் தற்கொலை

அம்பத்துார்: கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான், 24. மது போதைக்கு அடிமையான இவர், அம்பத்துார், வெங்கடபுரம் பகுதியில் உள்ள, தன் சகோதரி வீட்டிற்கு, நள்ளிரவு 12:00 மணிக்கு சென்றுள்ளார்.

அவரை, போதை மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பதற்காக, அவரது சகோதரி அம்பத்துாருக்கு அழைத்துள்ளார். இதனால், அவர் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், ஜான் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அம்பத்துார் போலீசார், ஜானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.

Advertisement