பழங்குடியின பெண்கள் 'குடம் கவிழ்ப்பு' போராட்டம்
பாலக்காடு: பிளாச்சிமடையில் 'கொக்க கோலா' நிறுவனத்திற்கு எதிரான போராட்டம் தொடங்கி, 24 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தங்களுக்கு இழைக்கப்பட்ட நீதி மறுப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பழங்குடியின பெண்கள், தலையில் குடத்தை கவிழ்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த, 24 ஆண்டுகளாக தொடரும் இந்த போராட்டத்தின் அடையாளமாக, 24 பழங்குடியின பெண்கள் தங்களது தலையில் குடங்களை கவிழ்த்தபடி 'நாரி - நீர்' (பெண் - நீர்) என்ற போராட்டத்தை முன்னெடுத்தனர். நேற்று முன்தினம் 'கொக்ககோலா' தொழிற்சாலை நுழைவாயிலை முற்றுகையிட்ட இவர்கள், தங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு இன்னும் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டினர்.
பிளாச்சிமடை போராட்டக் குழுவினர் கூறுகையில், 'பிளாச்சிமடை மக்களுக்கு நீதி வழங்கத் தவறிய முந்தைய அரசுகளை போலின்றி, புதிதாக அமையவிருக்கும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். குறிப்பாக, பிளாச்சிமடை இழப்பீடு தொடர்பான தீர்ப்பாய மசோதாவை உடனடியாக அமல்படுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்,' என்றனர்.
ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமத் தலைவர் ரங்கநாதன் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். போராட்டக் குழுத் தலைவர் விளையோடி வேணுகோபால் தலைமை வகித்தார். முற்றுகைப் போராட்டத்தில் பழங்குடியின பெண்கள் முன்னின்று வழிநடத்தினர்.
மேலும்
-
தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு எப்போது அதிகம்!
-
கையில் மல்லிகை சுற்றியபடி ஓட்டளித்த அமைச்சர்
-
இலவசம் என கூறாதீர்; 'யுனிவர்சல் பேசிக் இன்கம்'
-
தி.மு.க.,வினர் கொடூர தாக்குதல்; பா.ம.க., அன்புமணி கண்டனம்
-
சிதம்பரத்திற்கு பொருளாதாரம் தெரியாது
-
தி.மு.க., தேர்தல் பணி கண்காணிப்பு மையத்தில் ஸ்டாலின் திடீர் ஆய்வு