மணக்கோலத்தில் ஓட்டுச்சாவடி வந்து ஜனநாயக கடமையாற்றிய மணப்பெண்
நாமக்கல்: தாலி கட்டியவுடன், கணவருடன் ஓட்டுச்சாவடி வந்து, ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மணப்பெண்ணுக்கு பாராட்டு குவிகிறது.
நாமக்கல் என்.கொசவம்பட்டி வ.உ.சி., நகரை சேர்ந்த தீபிகாவுக்கும், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்துக்கும், நேற்று காலை நாமக்கல்லில் திருமணம் நடந்தது. சட்டசபை தேர்தல் நடப்பதால், தனது கடமையை நிறைவேற்ற எண்ணிய திருமண பெண் தீபிகா, தாலி கட்டியவுடன், தனது கணவர் ஆனந்துடன், என்.கொசவம்பட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளிக்கு வந்து, ஓட்டுப்போட்டு, தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
இது குறித்து மணப்பெண் தீபிகா கூறுகையில்,'' தனது திருமண நாளில், ஜனநாயக கடமையை ஆற்றியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. திருமண நிகழ்ச்சியை முடித்து விட்டு, திருப்பூர் செல்ல இருப்பதால், உடனடியாக வந்து ஓட்டு போட்டேன்,'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர் நிறுத்தம் எதிரொலி : ஈரான் தலைநகரில் 2 மாதங்களுக்கு பின் விமான நிலையம் திறப்பு
-
திருச்சூர் பூரம் திருவிழா துவக்கம்; யானை மீது பவனி வந்த பகவதி அம்மன்
-
மாலி நாட்டின் முக்கிய நகரங்களில் ராணுவம் - கிளர்ச்சியாளர்கள் மோதல்
-
கடை அருகே காயங்களுடன் இறந்து கிடந்த தொழிலாளி
-
வாலிபர் தற்கொலை
-
கிரைம் கார்னர்: ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய ரவுடி கைது
Advertisement
Advertisement