திருச்சி கிழக்கு தொகுதியில் ஓட்டு போட முடியாத முக்கிய கட்சி வேட்பாளர்கள்
திருச்சி: த.வெ.க., தலைவர் விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில், விஜய் உட்பட, முக்கிய கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்ளும், தங்களுக்கு ஓட்டு போட முடியவில்லை.
திருச்சி கிழக்கு தொகுதியில், த.வெ.க., தலைவர் விஜய் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, அ.தி.மு.க., சார்பில் ராஜசேகரன், தி.மு.க., சார்பில் 'சிட்டிங்' எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதில் விஜய்க்கும், இனிகோ இருதயராஜுக்கும் சென்னையில் ஓட்டு உள்ளது. அதேபோல், அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகரனுக்கு திருச்சி மேற்கு தொகுதியில் ஓட்டு உள்ளது. இதனால் கிழக்கு தொகுதியில் போட்டியிடும் மேற்கண்ட மூன்று வேட்பாளர்களும், தங்களுக்கு ஓட்டு போட்டுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.
அதேபோல், லால்குடி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் லீமா ரோஸூக்கு, கோவையில் ஓட்டு உள்ளது. இவரை எதிர்த்து போட்டியிடும் த.வெ.க., வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனுக்கு, ஸ்ரீரங்கம் தொகுதியில் ஓட்டு உள்ளது. துறையூர் தனி தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் லெனின் பிரசாத்துக்கு, ஸ்ரீரங்கம் தொகுதியிலும், த.வெ.க., வேட்பாளர் ரவிசங்கருக்கு மண்ணச்சநல்லுார் தொகுதியிலும் ஓட்டு உள்ளது.
மணப்பாறை தி.மு.க., கூட்டணி ம.ம.க., வேட்பாளர் அப்துல் சமதுக்கு, செங்கல்பட்டில் ஓட்டு உள்ளது. முசிறி தி.மு.க., வேட்பாளர் கருணைராஜா வுக்கு, திருச்சி மேற்கு தொகுதியில் ஓட்டு உள்ளது. த.வெ.க., வேட்பாளர் விக்னேஷூக்கு, லால்குடியில் ஓட்டு உள்ளது. அதேபோல, ஸ்ரீரங்கம் த.வெ.க., வேட்பாளருக்கு ரமேஷூக்கு அந்த தொகுதியில் ஓட்டு இல்லை. அமைச்சர் நேருவை எதிர்த்து, அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் ராஜசேகரனுக்கு ஸ்ரீரங்கம் தொகுதியில் ஓட்டு உள்ளது.
திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் நேருவின் மகன் எம்.பி., அருண். இவர், திருச்சி தில்லைநகரில் வசித்தாலும், அவரது ஓட்டு சொந்த ஊரான லால்குடி தொகுதி காணக்கிளியநல்லுாரில் உள்ளது. இதனால் அவர், நேருவுக்கு ஓட்டு போட முடியவில்லை.
அட என்ன இது? EVM-ஆலும் SIR-ஆலும் வந்த சோதனை?மேலும்
-
தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு எப்போது அதிகம்!
-
கையில் மல்லிகை சுற்றியபடி ஓட்டளித்த அமைச்சர்
-
இலவசம் என கூறாதீர்; 'யுனிவர்சல் பேசிக் இன்கம்'
-
தி.மு.க.,வினர் கொடூர தாக்குதல்; பா.ம.க., அன்புமணி கண்டனம்
-
சிதம்பரத்திற்கு பொருளாதாரம் தெரியாது
-
தி.மு.க., தேர்தல் பணி கண்காணிப்பு மையத்தில் ஸ்டாலின் திடீர் ஆய்வு