கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 84.99 சதவீதம் ஓட்-டுப்பதிவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 6 தொகுதிகளில் சராசரியாக, 85 சதவீத ஓட்டுப்பதிவு நடந்தது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய, 6 சட்டசபை தொகுதிகளுக்-கான தேர்தல் நேற்று நடந்தது. காலை, 7:00 மணி முதல், வாக்காளர்கள் ஆர்வமாக ஓட்டுச்சாவடி-களுக்கு வந்து ஓட்டளித்து, தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.முதியவர்கள், மூதாட்டிகள், இளைஞர்கள், இளம்பெண்கள் என, வாக்காளர்கள் நீண்ட வரி-சையில் காலையிலேயே நின்று, தங்களின் ஜன-நாயக கடமையை பதிவு செய்தனர். காலை, 7:00 மணி முதல், 9:00 மணி வரையில் மாவட்டம் முழுவதும், 16.41 சதவீதமும், 11:00 மணி வரையில், 36.53 சதவீதமும், மதியம், 1:00 மணி வரையில், 56.21 சதவீதமும், மதியம், 3:00 மணி வரையில், 70.07 சதவீதமும், மாலை, 5:00 மணி வரையில் 82.40 சதவீதமும் பதிவாகி இருந்தது. ஓட்டுப்பதிவு, மாலை, 6:00 மணிக்கு நிறைவ-டைந்த நிலையில், சில ஓட்டுச்சாவடியில் இருந்த வாக்காளர்களுக்கு மட்டும் டோக்கன் கொடுக்-கப்பட்டு, தொடர்ந்து ஓட்டுப்பதிவு நடந்தது.
இது குறித்து அதிகாரிகள்
கூறியதாவது: மாவட்டத்தில் இரவு, 8:00 மணி நிலவரப்படி பர்கூரில், 87.96 சதவீதம், ஓசூர் - 80.07 சதவீதம், கிருஷ்ணகிரி - 84.83, தளி - 83.98, ஊத்-தங்கரை - 85.75, வேப்பனஹள்ளி - 89.39 சதவீதம் என சராசரியாக, 6 தொகுதிகளிலும், 84.99 சத-வீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
டோக்கன் கொடுத்து வாக்காளர்கள், ஓட்ட-ளித்து வரும், சில பூத்களில் பெறப்பட்ட ஓட்டுகள் மட்டும் கணக்கிடப்பட வேண்டும். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், 'சீல்' வைக்கப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்ட ஓட்டு எண்ணும் மையத்-திற்கு அனுப்பும் பணிகள் நடந்து வருகிறது. இவ்-வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement