சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவையொட்டி கடைகள் அடைப்பு; சாலைகள் 'வெறிச்'
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நேற்று ஓட்டுப்பதிவை முன்-னிட்டு, 75 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால், பல சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
தமிழகம் முழுவதும் நேற்று சட்டசபை தேர்த-லுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. இதையொட்டி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஓட்டுப்
பதிவு நாளன்று அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
அதன்-படி, கிருஷ்ணகிரியில் நேற்று காலை முதல், ஓட்-டுப்பதிவு நடந்தது. இதையொட்டி, கிருஷ்ணகி-ரியில், 75 சதவீத கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. திறந்திருந்த ஒரு சில ஓட்டல்களில் உணவுகளை வாங்க, பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் குவிந்தனர். மேலும், அனல் காற்று வீசியதால் கரும்பு ஜூஸ், முலாம்பழ ஜூஸ் போன்றவையும் அதிகளவில் விற்பனையானது. ஓட்டுகளை பதிவு செய்த பொதுமக்கள் வெயில் காரணமாக, தங்கள் வீடுகளில் முடங்கியதால், சாலையில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சொடி
காணப்பட்டது.
மேலும்
-
தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு எப்போது அதிகம்!
-
கையில் மல்லிகை சுற்றியபடி ஓட்டளித்த அமைச்சர்
-
இலவசம் என கூறாதீர்; 'யுனிவர்சல் பேசிக் இன்கம்'
-
தி.மு.க.,வினர் கொடூர தாக்குதல்; பா.ம.க., அன்புமணி கண்டனம்
-
சிதம்பரத்திற்கு பொருளாதாரம் தெரியாது
-
தி.மு.க., தேர்தல் பணி கண்காணிப்பு மையத்தில் ஸ்டாலின் திடீர் ஆய்வு