தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்

சென்னை: தமிழகத்தில், டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள், அதன் கடலோர பகுதிகளில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த மையத்தின் அறிக்கை:

மஹாராஷ்டிரா மாநிலம், கிழக்கு விதர்பா முதல், தமிழகத்தின் குமரிக்கடல் வரையிலான பகுதிகளின் மேல், வளி மண்டலத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள், அதன் கடலோர பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இன்று முதல், ஏப்., 27 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும். இதனால், வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 38 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement