தங்கம், வெள்ளி விலை சரிவு

சென்னை: தமிழகத்தில் நேற்று வெள்ளி கிலோவுக்கு, 5,000 ரூபாயும், தங்கம் சவரனுக்கு, 720 ரூபாயும் குறைந்துள்ளது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் சில தினங்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் குறைந்து வருகின்றன. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,250 ரூபாய்க்கும், சவரன், 1,14,000 ரூபாய்க்கும் விற்பனையானது.

வெள்ளி கிராம், 275 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 90 ரூபாய் குறைந்து, 14,160 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 720 ரூபாய் சரிவடைந்து, 1,13,280 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு, ஐந்து ரூபாய் குறைந்து, 270 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.70 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

Advertisement