காலம் கடந்து கொண்டிருக்கிறது; ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை
வாஷிங்டன்: ''ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்கா அவசரப்படவில்லை; ஆனால் ஈரானுக்கு காலம் கடந்து கொண்டிருக்கிறது'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஹிஸ்புல்லாவிற்கான நிதியுதவியை ஈரான் நிறுத்த வேண்டும். அது கட்டாயம். ஹார்முஸ் ஜலசந்தியில் நமக்கு கட்டுப்பாடு உள்ளது. 3 நாட்களுக்கு முன்பே அவர்கள் அதைத் திறந்திருப்பார்கள். அவர்களே நம்மிடம் வந்து, நாங்கள் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஒப்புக்கொள்கிறோம் என்று கூறினார்கள்.
என்னைத் தவிர, எனது குழுவில் இருந்த மற்ற அனைவரும் இதனால் மகிழ்ச்சியடைந்தனர். அப்போது நான், ஒரு நிமிடம் பொறுங்கள்; நாம் இதற்கு ஒப்புக்கொண்டால், அதன் மூலம் அவர்கள் தினமும் 50 கோடி டாலர் வருமானம் ஈட்டுவார்கள் என்றேன். இந்தப் பிரச்னையை அவர்கள் முழுமையாகத் தீர்க்கும் வரை, அவர்கள் தினமும் 50 கோடி டாலர் சம்பாதிப்பதை நான் விரும்பவில்லை.
கடந்த 6 வாரங்களாக போர் நிறுத்தம் கொண்டு வர செயல்பட்டு கொண்டிருக்கிறேன். ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்கா அவசரப்படவில்லை; ஆனால் காலம் கடந்து கொண்டிருக்கிறது. ஈரானின் ராணுவம் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. துப்பாக்கிகளுடன் கூடிய படகுகளை அவர்கள் அங்குமிங்கும் ஓட்டித் திரிகிறார்கள்; அவற்றை நாங்கள் காணும்போது, அவற்றையும் அழித்துவிடுவோம்.
ஈரானின் கடற்படையும், விமானப்படையும் இல்லாமல் போய்விட்டன. அவர்களின் வான்வழித் தடுப்பு அமைப்புகளும் அழிந்துவிட்டன. அவர்களின் தலைவர்கள் அனைவரும் இல்லாமல் போய்விட்டனர். இந்தப் பிரச்சினையின் ஒரு பகுதி என்னவென்றால், அவர்கள் தங்கள் தலைமைத்துவத்தை இழந்துவிட்டார்கள்; மேலும் அவர்கள் பூனைகளும் நாய்களும் சண்டையிடுவது போலத் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக்கொள்கிறார்கள். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.
ஆமாம், காலம் கடந்துகொண்டிருக்கிறது டிரம்ப் பதவி விலக. அவரே பதவி விலகினால் நல்லது. அல்லது பதவியிலிருந்து இறக்கப்படுவார். The choice is Trumps.
யேசப்பா ...ஆத்திரம் கொள்ளாதீர்கள் ....உங்களை சுற்றி உங்களின் ஸ்தோஸ்திரம் சொல்வோர்கள் ஏராளம் ...அதனால ...
இவருக்கு கல்தா கொடுக்கும் வரை அடாங்கமாட்டார். மற்றொரு நாட்டின் மீது அத்து மீறி கைய்ய வைக்க இவருக்கு யார் உரிமைய்ய கொடுத்தது. உலக நாடுகள் ஒன்று சேர்ந்து இவருக்கு லாடம் காட்டிட விட்டால் இவர் வால் நீண்டு கொண்டே இருக்கும் அயோக்கிய ஜென்மத்தின் வாலை அறுத்து ஏறிய வேண்டும். ஒவ்வொரு நாடும் பாதிக்க பட வேண்டும். உலக நாடுகள் பிரிந்து கிடைப்பதால் இது போன்ற அயோக்கிய தனம் நடந்து கோண்டெனா இருக்கும். உலக சிறிய நாடுகளுக்கு பெரும் ஆபத்து விழுங்க்க நேரம் பார்த்து கொண்டிருக்கிறார் இவர் நடவடிக்கையயை போல் எந்த அமெரிக்க ஜனாதி பதியும் இதுவ்ரை நடந்து கொள்ள வில்லை. அமெரிக்கன் கள் இவர்கள் நம்பத்தகுந்த நபர்கள் அல்ல . ஏமாந்தால் நம்மீதும் பாய்வார். உதாரணம் உண்டு.
ஈரானில் எல்லாவற்றையும் அழித்துவிட்டதால் எச்சரிக்கை எதற்கு. ? உங்கள் வேலையை பாருங்கள்
ஈரான் நாட்டு மக்களின் பசிக்கு அவர்கள் ஸம்பாதிக்கத்தானே வேண்டும் . அவர்களின் வாழ்வாதாரத்தை சீரழித்துவிட்டு என்ன சவடால் ?
யாராவது அந்த நோபல் பரிசை கொடுத்து தொலையுங்கடா. அது வரும் வரை தினமும் அக்கப்போர் தான்
It is better to cripple Iran permanently, there by terrorists groups wont get helps. Pak also leave their policy of supporting terrorists by the borrowed money. Somehow the terrorists have to be wiped out from this planet earth.
மே 4 க்குப்பிறகு விடியல் சார் வேலை வெட்டி இல்லாமல் இருப்பார் சாரை ஈரானுடன் பேச வைக்கலாம் என்ன கோழியும் வாத்தும் பேசிக்கொள்வதைப்போல் இருக்கும் நல்ல காமெடியா இருக்கும்.
அட நீங்க வேற, விடியல் குடும்பம் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் சில பல வருடங்களில் மொத்த ஈரானும் விடியல் குடும்ப சொத்தாக மாறிவிடும். அதனால் ஈரான் விடியல் குடும்பத்துடன் பேசுவதை தவிர்த்துவிடும்.
ஈரானுடனான பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலிலும், மீண்டும் மோதல் வெடிக்கக்கூடும் என்ற அச்சங்களுக்கு மத்தியிலும், அமெரிக்கா தனது மூன்றாவது விமானம் தாங்கி கப்பலை இப்பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளது. நிமிட்ஸ் வகையைச் சேர்ந்த USS George H.W. Bush என்ற அமெரிக்க கடற்படை கப்பல், தற்போது இந்தியப் பெருங்கடலில் இயங்கி வருகிறது. மேலும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா, வடக்கு இஸ்ரேல் மீது குறைந்தது 30 ராக்கெட்டுகளை வீசியுள்ளது. இந்த போர்நிறுத்த மீறலின் மூலம், மேற்கு ஆசியப் போர் மீண்டும் தொடங்கி இருப்பதாகத் தெரிகிறது.
உலகத்தை அழிக்காமல் விட மாட்டார் டிரம்ப்