தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி இந்தியாவுக்கு நாடு கடத்தல்
புதுடில்லி: போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியான சலீம் டோலா,59, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டான்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் முக்கிய புள்ளியாக கருதப்படும் சலீம் டோலா மீது நம் நாட்டில், போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ், 10 வழக்குகள் உள்ளன. குறிப்பாக, மஹாராஷ்டிராவின் சாங்கிலி மாவட்டத்தில் கண்டறியப்பட்ட 252 கோடி ரூபாய் மதிப்பிலான எம்.டி., எனப்படும் மெபெட்ரான் போதைப் பொருள் பிடிபட்ட வழக்கின் முக்கிய குற்றவாளி இவன் தான். பாகிஸ்தானில் பதுங்கி உள்ள பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளான்.
நம் மத்திய புலானாய்வு அமைப்பின் கோரிக்கையின் பேரில், இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பு, 'ரெட் கார்னர்' நோட்டீஸ் விடுத்திருந்தது. சில தினங்களுக்கு முன், துருக்கி தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் சலீம் டோலா பிடிபட்டான்.
ஐக்கிய அரபு எமிரேட்சின் உதவியுடன் அவரை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகளை மத்திய புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்டன. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இது தொடர்பாக எமிரேட்ஸ் அரசுடன் பேச்சு நடத்தியிருந்தார். இதன் பயனாக, தற்போது சலீம் டோலா,59, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டான்.
இன்று காலை ஒரு சிறப்பு விமானத்தில் டில்லிக்கு அழைத்து வரப்பட்ட அவன், தற்போது உளவுத்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருக்கிறான். விசாரணைக்காக அவன் மும்பை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறான்.
கடந்தாண்டு சலீம் டோலாவின் மகன் தாஹிர் டோலா மற்றும் அவரது உதவியாளர் சலீம் முகமது சோஹைல் ஷேக் ஆகியோர் துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த துன்மார்க்கர்களை துருக்கியிலேயே கூலிப்படை ஆளுங்களை வைத்து போட்டுத் தள்ளகமலா, சேலவூ செய்து நாடு கடத்திவந்து, ஜெயிலில் வைத்து கறிபிரியாணி போட்டு கோர்ட்டுக்கு கூட்டிப்போனால், விடுதலை பெற்றுத்தருவார்கள். அப்பறம் அவர்கள்,துபாய், சிங்கப்பூர் வழியாக பக்கிஸ்தானில் உள்ள தல தாவூத் இப்ராஹீமுக்கு சேவை செய்ய போய்விடுவார்கள். ஸ்டோரி எண்டிங் சூப்பர் ஃபினிஷிங் - இல்ல
கவலை படாதே தீவிரவாதியே இந்த நாட்டு சுப்ரீம் கோர்ட் உன்னை போன்ற அயோக்கியர்களை கண்டிப்பாக விட்டு விடும்.
ஐயோ, இவன வச்சி சோறு போட்டு, காவல் போட்டு, கேமிராக்கள் செட் செய்து, தனியாக மின்சாரம், விளக்கு , போலீஸ், படை, வேலையாள் என்று எவ்வளவு சிலவு செய்தாலும், கூலாக வாக்கிங் சென்று ஷாப்பிங் செய்து விட்டு வருவாரே... இப்படி ஷாப்பிங் செய்து வந்த அம்மா இன்னும் கூலாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். வெளியே சென்று வந்த அவரையும், அவரை வெளியே விட்ட காவல்துறை அதிகாரிகளும் சுதந்திரமாகத் தானே இருக்கிறார்கள். வாழ்க பணநாயகம்.
என்னதான் கஷ்டப்பட்டு இதையெல்லாம் செய்து என்ன பயன் கொள்ளையடிக்க வந்த வெள்ளையன் ஆரம்பித்த நம் நாட்டு நீதித்துறை இவர்களை விடுவித்து விடும்
தனி விமானம் ...
டுமீல் நாட்டு திருட்டு திராவிட முன்னேறாக் கட்சி சார்பில் புதிய வக்கீல், ராஜீவ் கொலைபுகழ் பேரறிவாளன் அவர்கள் ஆஜராகி, அமைதி மார்க்கத்துக்கு பயங்கரவாதம் செய்யக்கூட உரிமை தராத மனித உரிமை/மத உரிமை மீறிய ஹிந்து தர்ம ம.த.வெ.றி புடித்த மத்திய சர்க்காருக்கு எதிராக வாதம் செய்து வெற்றி வாகை சூடுவார் என அறிவிப்பு
விசாரணை எல்லாம் முடிந்தவுடன் தேவையான தகவல்கள் பெற்றவுடன், நமது மத்திய அரசின் துறைகள் மாற வேண்டும்... அஜித் குமார் அவர்களை விசாரணை செய்ததை போல செய்ய சொல்ல வேண்டும்
They will enjoy everything in jail. Our judicial process takes years together to deliver judgement.
தாவூத் இப்ராஹிம் பெயர் ஒன்று தான் வெளியில் வந்து இருக்கிறது. இதை தவிர எத்தனை பேர் என்பது மர்மமாகவே உள்ளது.
"லியாரி" குப்பத்துலயே போட்டு தள்ளியாச்சு...துரந்தர் இன்னும் பாக்கலியோ?
என்ன பண்ணுச்சு அரசுமேலும்
-
காமன்வெல்த் பளுதுாக்குதல்: இந்தியா கலக்கல்
-
காது கேளாதோர் மாநில செஸ் 60 பேர் உற்சாக பங்கேற்பு
-
உடற்பயிற்சி நிலையங்களுக்கு இடையிலான ‘பவர் லிப்டிங்’
-
மாநில நீச்சல் போட்டி சென்னை வீரருக்கு வெள்ளி
-
ஒரு சொத்துக்கு ‘இரட்டை ஆவணம்’ தயாரித்து ரூ.3 கோடி நிலமோசடி: சகோதரர்கள் 4 பேர் கைது
-
மதுராந்தகத்தில் கலெக்டர் ஆய்வு