தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு

1


சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 28) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,040 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 800 ரூபாய்க்கும், கிராமுக்கு 130 ரூபாய் குறைந்து 14,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


சர்வதேச சந்தைகளில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் காட்டும் ஆர்வம் போன்ற காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,200 ரூபாய்க்கும், சவரன், 1,13,600 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 270 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்றைய நிலவரம்



ஞாயிற்றுக் கிழமை, தங்க சந்தைக்கு விடுமுறை. அன்று, முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 30 ரூபாய் உயர்ந்து, 14,230 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 240 ரூபாய் அதிகரித்து, 1,13,840 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

இன்றைய நிலவரம்



இந்நிலையில் இன்று (ஏப்ரல் 28) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,040 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 800 ரூபாய்க்கும், கிராமுக்கு 130 ரூபாய் குறைந்து 14,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி நிலவரம்



வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 265 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்

Advertisement