சிவலிங்கேஸ்வர சுவாமிகளின் 58வது திருஅவதார நாள் வேள்வி
கோவை: ஒண்டிப்புதுார் அருகே கோவை காமாட்சிபுரி ஆதினம் 51 சக்தி பீடம் கோவிலில் அங்காள பரமேஸ்வரி அன்னை, துர்கா தேவி, முருகன், விநாயகர், சிவபெருமான், பாரத மாதா, முப்பெரும் தேவியர், கருப்பசாமி உள்ளிட்ட தெய்வங்கள் உள்ளன.
காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் மறைவுக்கு பிறகு, பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் இரண்டாம் ஆதினமாக பொறுப்பேற்றார். இந்நிலையில், சிவலிங்கேஸ்வர சுவாமிகளின் 58வது திரு அவதார நாள் வேள்வி வழிபாடு 51 சக்தி பீடத்தில் நடந்தது. பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், 108 சங்காபிஷேகம் மற்றும் அலங்கார வழிபாடு செய்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement