மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கூடுதல் குடிநீர் வசதி தேவை
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கூடுதல் குடிநீர் வசதிகள் செய்துதர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு, செங்கல்பட்டு மாவட்டம் இன்றி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பிரசவம், சாலை விபத்து உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இங்கு, தினமும் 3,000க்கும மேற்பட்ட மேற்பட்ட புறநோயாளிகளும், 1,700க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனை வளாகத்தில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், நோயாளிகளுக்கு அதிகளவில் தண்ணீர் தேவை ஏற்படுகிறது. அங்கு சிகிச்சைக்கு வரும் புறநோயாளிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மேலும், நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்களும் தண்ணீர் வசதியின்றி, ஜி.எஸ்.டி., சாலையை கடந்து, தனியார் கடைகளுக்கு சென்று, குடிநீர் வாங்கி வருகின்றனர்.
இதனால், அவ்வப்போது விபத்துக்களும் நிகழ்கின்றன. மருத்துவமனை வளாகத்திற்குள் குடிநீர் தேவையை போக்கும் அளவிற்கு முறையான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லை என நோயாளிகளின் உறவினர்கள் வே தனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நோயாளிகளின் உறவினர்கள் கூறியதாவது:
செங்கல்பட்டு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்திற்குள் குடிநீர் வசதியை போக்கும் அளவிற்கு, இடமில்லை. கோடை வெயிலில் தண்ணீர் வசதியின்றி பலரும் அல்லல்படுகிறோம். குடிநீர் தொட்டியை தேடி அலைய வேண்டியுள்ளது. இங்குள்ள கழிப்பறைகளும் பராமரிப்பின்றி சுகாதாரமற்று கிடக்கிறது. இதுவே நோயாளிகளுக்கு மேலும் மன உளைச்சலை தருகிறது. நோயாளிகள் நலன்கருதி, மருத்துவமனை வளாகத்தில், கூடுதல் குடிநீர் வசதி செய்துதர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
திரிணமுல் காங்கிரசின் அராஜக ஆட்சி; மம்தா அரசுக்கு ராகுல் கண்டிப்பு
-
2024 லோக்சபா தேர்தலை விட இம்முறை கூடுதலாக 50 லட்சம் பேர் ஓட்டளிப்பு
-
கொலம்பியாவில் பஸ்சில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி; 20 பேர் காயம்
-
கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி; ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்ட மக்கள்
-
உயிரியல் பூங்கா விலங்குகளை வெயிலில் இருந்து காக்க ஏற்பாடு
-
கணவர் சாவில் சந்தேகம்: விசாரிக்க மனைவி புகார்