விழுந்தது கள்ள ஓட்டு

1

போத்தனூர்: போத்தனூரிலுள்ள பாரதி நகரை சேர்ந்தவர் சிக்கந்தர் பாஷா. இவரது மகன் முகமது சொகைல், 18. தேர்தல் நாளன்று போத்தனூரிலுள்ள மாதா நடுநிலைப்பள்ளிக்கு, முதல் முறையாக ஓட்டு போட சென்றார்.

வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்த்த அலுவலர், இவரது ஓட்டு போடப்பட்டு விட்டதாக கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த முகமது சொகைல் தனது உறவினருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு சென்ற உறவினர் ஹக்கீம், அலுவலரிடம் எப்படி வேறு நபரை அனுமதித்தீர்கள் என கேட்டார்.

சத்தம் கேட்டு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவரை சமாதானப்படுத்திய பின், விபரங்களை சரிபார்த்தனர். அதில், பாஷா என்பவரின் மகன் முகமது சொகைல், இவரது ஓட்டை போட்டுச் சென்றது தெரிந்தது.

இதையடுத்து அவரது ஓட்டினை, இவர் போட அங்கிருந்த கட்சி ஏஜன்ட்கள் அனுமதித்தனர். இதனை தொடர்ந்து முகமது சொகைல் தனது கன்னி ஓட்டை மகிழ்ச்சியுடன் பதிவு செய்து சென்றார். 30 வயது பெண் ஒருவரின் ஓட்டும் வேறு நபரால் போடப்பட்டது. அவருக்கும் ஓட்டு போட வாய்ப்பு தரப்பட்டது.

Advertisement