ரோட்டில் ஓடும் கழிவுநீர் பொதுச்சுகாதாரம் பாதிப்பு

1

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, பள்ளி வாசல் அருகே ரோட்டில் வழிந்தோடும் கழிவு நீரால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

கிணத்துக்கடவு பள்ளிவாசல் அருகே உள்ள ரோட்டில், முறையான கழிவு நீர் கால்வாய் வசதி இல்லாததால் அடிக்கடி ரோட்டில் கழிவு நீர் வழிந்து ஓடுகிறது. இதனால், இவ்வழியாக சென்று வரும் மக்கள் மற்றும் பைக் ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

மேலும், இப்பகுதியில் ரோட்டில் வழிந்து ஓடும் கழிவு நீரால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அருகில் உள்ள குடியிருப்பு மக்கள் பாதிக்கப்படுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இங்கு விரைவில் கால்வாய் வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், பொதுச்சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும், என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement