அதிக ஓட்டு சதவீதம் ஆட்சி மாற்றத்துக்கானதே; அன்புமணி மகிழ்ச்சி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வகையில் பதிவான 85.12% ஓட்டுகள், ஆட்சி மாற்றத்திற்கான ஓட்டுகள் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை;
தமிழக சட்டசபை தேர்தலில் 85.12% ஓட்டுகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. தமிழக தேர்தல் வரலாற்றில் இந்த அளவு ஓட்டுகள் பதிவாகியிருப்பது இதுதான் முதல் முறையாகும்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் பெரும் கொந்தளிப்பில் இருந்தனர்; திமுக ஆட்சியை அகற்றுவதற்காக திரண்டு வந்து வாக்களித்துள்ளனர் என்பதையுமே இது காட்டுகிறது. தமிழக மக்கள் எப்போதுமே ஜனநாயகத்தை மதிப்பவர்கள்; அமைதிப்புரட்சி செய்பவர்கள். இப்போதும் அதைத்தான் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டன. இன்னொருபுறம் சட்டம் - ஒழுங்கை பாதுகாத்தல், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை கட்டுப்படுத்துதல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், வேலைவாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட ஓர் அரசின் அடிப்படைக் கடமைகள் எதையுமே திமுக அரசு செய்யவில்லை.
அதனால், கொந்தளித்துப் போன மக்கள் திமுகவுக்கு பாடம் புகட்டுவதற்காக காத்திருந்தனர். மக்கள் தங்களின் உணர்வுகளை அப்பட்டமாக வெளிப்படுத்தாமல், தெளிந்த நீரோடையாக இருந்தாலும், ஆழ்கடலின் பிரளயம் போன்று அவர்களின் மனதுக்குள் திமுகவை இந்தத் தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்ற கோபம் நீரு பூத்த நெருப்பாக கனன்று கொண்டே இருந்தது.
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்த என்னைப் போன்றவர்களால் இந்த கோபத்தை புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், ஆட்சியாளர்களால் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை; அதனால் தங்களைத் திருத்திக் கொள்ளவும் இல்லை. எனவேதான் தமிழக மக்கள் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தவாறு நேற்று நடந்த தேர்தலில் தங்களின் கோபத்தை தீர்ப்பாக வெளிப்படுத்தி விட்டனர். அதன் விளைவு தான் வரலாறு காணாத வகையில் 85.12% ஓட்டுகள் பதிவாகியிருப்பதாகும்.
இந்த ஓட்டுகள் ஆட்சி மாற்றத்துக்கான வாக்குகள் தான் என்பதை அனைவராலும் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தத் தீர்ப்புக்காகத் தான் தமிழக மக்கள் காத்திருந்தார்கள். இந்தத் தீர்ப்பு தான் தமிழக மக்களுக்கு நரக ஆட்சியிலிருந்து விடுதலை அளிக்கப் போகிறது.
இனி வரும் காலம் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியையும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பையும், அனைவருக்கும் அமைதியான, நிம்மதியான வாழ்க்கையையும் வழங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்தத் தீர்ப்பை வழங்கிய வாக்காளர்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வயலில் பயிர்கள் செழித்து வளர்ந்திருந்தாலும் அவற்றை அறுவடை செய்து வராவிட்டால் எந்தப் பயனும் இல்லை. அதேபோல் தான் தேர்தல் களமும். மக்கள் மனதில் கனன்ற கோபத்தை ஆட்சியாளர்களுக்கு எதிரான வாக்குகளாக மாற்றியது தான் இந்தத் தேர்தலின் வெற்றி ஆகும். அதற்காக அதிமுக தலைமையிலான கூட்டணியில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் மாநிலம் முழுவதும் சுற்றி வந்து தீவிரமாக பரப்புரை செய்தனர்.
அதேபோல், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் அனைத்து நிலை நிர்வாகிகளும் எந்தத் தொகுதியில் எந்தக் கட்சி வேட்பாளர் போட்டியிடுகிறார் என்பதையெல்லாம் மனதில் கொள்ளாமல் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தார்கள். இதற்காக அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சியினர் இந்தத் தேர்தலில் காட்டிய வேகமும், விவேகமும் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எல்லா தொகுதிகளிலும் பலமுறை வீடு வீடாக சென்று கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்காக ஓட்டுகளைச் சேகரித்தனர்.
பல்வேறு தரப்பினராலும் ஏற்படுத்தப்பட்ட தடைகளையும், முட்டுக்கட்டைகளையும் தகர்த்தெறிந்து பாமக மற்றும் கூட்டணி கட்சியினரின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்களுக்கு நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
அதிக ஒட்டு சதவீதம் என்பது நேர்மையான தேர்தலில் பிரதி பலிக்கலாம். இந்த தீய சக்தி பல ஊர்களில் கள்ள ஒட்டு போட்டு irukeergal சென்னையில் கொஞ்சம் அடக்கி வாசித்து உள்ளனர். அன்புமணி குறைந்தது 5 சீட்டுகளாவது பெற வேண்டும் இல்லாவிட்டால் இந்த கட்சியை உன் அக்கா மற்றும் மகன்கல் கூட்டம் ஆட்டைய போட்டு விடும். சத்ரியனா இருந்தாலும் சாணக்யத்தனமும் இருக்க வேண்டும்.
ஔரங்கசீப் பரம்பரை சத்திரியனா? அப்பனை போட்டு தள்ளி விட்டு வந்தவர் அல்லவா?
பாஜக மிரட்டலுக்கு பயந்த சத்ரியன், ஹி ஹி.
பொய்யர் கும்பல் தலைவன்
ஐயா சாமிகளா அதிக ஒட்டு பதிவு ஒன்றுமில்லை. SIR - ஆல் ஏற்பட்ட மாற்றம்.
தந்தையை ஏமாற்றிய உமக்கு மட்டும் தோல்வி தான் கிடைக்கும்
நாட்டையே ஆட்டை போட்ட குடும்பத்துக்கு என்ன கிடைக்கும்?
தந்தையை ஏமாற்றிய மகனுக்கு என்ன கிடைக்கும்
முதலில் பதில் சொல்லும்
மத்தியில் ஆள்பவர்கள் தான் அவர்களிடம் பொய் கேளுங்கள்