வெற்றி எப்படி ஜோதிடர்களிடம் தேடி செல்லும் வேட்பாளர்கள் திக்..திக்.. மனநிலையில் தி.மு.க., அ.தி.மு.க.,வினர்

கம்பம்:ஒட்டுப் பதிவு முடிந்த நிலையில், வேட்பாளர்கள் தங்களுக்கு வெற்றி வாய்ப்பை பற்றி தெரிந்து கொள்ள கேரளாவில் உள்ள நம்புதிரிகளை ( ஜோதிடர்கள் ) பார்க்க பலர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப். 23 ல் நடந்து முடிந்துள்ளது. கடந்த 2 மாதமாக கடும் வெயிலில் அலைந்து திரிந்து பிரசாரம் செய்ததால், பல வேட்பாளர்கள் கோடை வாசஸ்தலங்கள் நோக்கி சென்று விட்டனர். இதற்கிடையே பலர் தங்களின் ஆஸ்தான ஜோதிடர்களை சந்தித்து , தங்களின் வெற்றி குறித்து கேட்க துவங்கி உள்ளனர்.

கேரள மாநிலத்தில் கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற ஜோதிடர்களை பார்க்க பலர் சென்றுள்ளனர். குறிப்பாக சபரிமலை சாஸ்தாவின் ஊரான பந்தளத்தில் சோவி போட்டு பார்க்கும் பிரபல ஜோதிடரை பார்க்க தேனி மாவட்டத்தில் இருந்து சில வேட்பாளர்கள் சென்றுள்ளனர்.

ஒட்டுப் பதிவு செய்த நேரம், ராசி, லக்னம், நடைபெறும் திசாபுத்தி போன்றவற்றை வைத்து அலசி பார்த்து வருகின்றனர்.

அத்துடன் குறிப்பிட்ட சில கோயில்களில் விசேச பூஜைகளும் நடத்தி அதில் பங்கேற்று வருகின்றனர். மேலும் தமிழகத்தில் உள்ள பிரபல ஜோதிடர்களிடமும் தங்களின் வெற்றி குறித்து பல வேட்பாளர்கள் கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisement