வேலைவாய்ப்பை ஏற்படுத்த தொழிற்பேட்டை இதுதான் மேட்டுப்பாளையம் தொகுதி மக்களின் கோரிக்கை
மேட்டுப்பாளையம்: 'மேட்டுப்பாளையம் தொகுதியில், மில்கள், கம்பெனிகள் மூடப்பட்டதால், வேலைவாய்ப்பை ஏற்படுத்த, தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் தொகுதியில் உள்ள காரமடையில், 25 ஆண்டுகளுக்கு முன், நுால்மில், இரண்டு இரும்பு ஆலைகள், சிறுமுகையில் விஸ்கோஸ் ஆலை என, நான்கு பெரிய ஆலைகளும், மில்லும் இருந்தன. இதனால் நேரடியாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர். பல தொழில் நிறுவனங்கள் வாயிலாக, பல்லாயிரக்கணக்கானவர்கள் மறைமுகமாக வேலை வாய்ப்பு பெற்று வந்தனர். அதனால், இத்தொகுதி மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டு இருந்தது. பல்வேறு காரணங்களால் ஆலைகள், மில் என நான்கும் மூடப்பட்டதால், அனைத்து தொழிலாளர்களும் வேலை இழந்தனர். இவர்கள், வேறு வேலை தேடி, திருப்பூர், கோவை மாநகர பகுதிகளுக்கு சென்றனர்.
மேட்டுப்பாளையம் தொகுதியில் போதிய இட வசதிகள், தண்ணீர் வசதி ஆகியவை இருந்தும், கடந்த, 25 ஆண்டுகளாக புதிதாக எந்த தொழிற்சாலைகளும், மில்களும் அமைக்கவில்லை. அ.தி.மு.க., -- தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகள், 25 ஆண்டுகளாக மாறி, மாறி ஆட்சி செய்து வந்தன. ஆனால் புதிதாக தொழிற்சாலைகளும், மில்களும் திறக்க நடவடிக்கை இல்லை. இதனால், இத்தொகுதி விவசாயம் சார்ந்த பகுதியாக மாறியுள்ளது.
மேட்டுப்பாளையம் நகரில் உருளைக்கிழங்கு கிழங்கு மண்டிகளும், அன்னுார் சாலையில் காய்கறி மண்டிகளும் உள்ளன. இரு மண்டிகளிலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். படித்து இளைஞர்கள், நிரந்தர வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ள பொதுமக்களுக்கு, வேலை வாய்ப்பு ஏற்படுத்த, புதிதாக அமைய உள்ள அரசு, மேட்டுப்பாளையம் தொகுதியில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
வீராம்பட்டினம் கடற்கரையில் மது குடிக்க தடை மீனவ கிராம பஞ்சாயத்தார் அதிரடி அறிவிப்பு
-
இதோ ஒரு ஜில் தகவல்! கோவையில் வெயிலின் உக்கிரம் குறையும்
-
கலர் ஓட்டுச்சாவடிகள் காட்சிக்கு மட்டும் 'ஓகே'
-
ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் இன்றும் நாளையும் தடை
-
7 நீதிபதிகள் இடமாற்றம்
-
தொகை வழங்காததால் ஆசிரியர்கள் தர்ணா