ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் இன்றும் நாளையும் தடை
கோவை: ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் இன்றும், நாளையும் இரவில் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேம்பாலத்தில் 60 கி.மீ.,வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். ஏறி, இறங்கும் இடங்களில், 30-40 கி.மீ., வேகமே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் நடக்கின்றன.
இதை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், நெடுஞ்சாலைத்துறையினர் 44 நவீன கேமராக்களை பொருத்தி வருகின்றனர். சோதனை பணிகள் இன்றும், நாளையும் மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடக்கின்றன.
இதனால் மேம்பாலத்தில் இரண்டு தினங்களும் இரவு 10 முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர் நிறுத்தம் எதிரொலி : ஈரான் தலைநகரில் 2 மாதங்களுக்கு பின் விமான நிலையம் திறப்பு
-
திருச்சூர் பூரம் திருவிழா துவக்கம்; யானை மீது பவனி வந்த பகவதி அம்மன்
-
மாலி நாட்டின் முக்கிய நகரங்களில் ராணுவம் - கிளர்ச்சியாளர்கள் மோதல்
-
கடை அருகே காயங்களுடன் இறந்து கிடந்த தொழிலாளி
-
வாலிபர் தற்கொலை
-
கிரைம் கார்னர்: ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய ரவுடி கைது
Advertisement
Advertisement