தபால் ஓட்டு போட அரசு ஊழியர்கள், போலீசாரிடம் ஆர்வமில்லை! வசதிகள் செய்தும் 547 பேர் ஓட்டளிக்காத அவலம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், போலீசார், அத்தியாவசிய பணியாளர்கள் தபால் ஓட்டளிக்க வசதிகள் செய்திருந்தும், 547 பேர் ஓட்டளிக்காமல் அலட்சியம் காட்டியுள்ளது தெரிய வந்துள்ளது.
தமிழகம் முழுதும் நேற்று முன்தினம் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், காஞ்சிபுரம் என, நான்கு சட்டசபை தொகுதிகளில் உள்ள, 1,556 ஓட்டுச்சாவடிகளிலும் எந்த பிரச்னையுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.
மாவட்டம் முழுதும், 12 லட்சத்து, 7,757 வாக்காளர்களில், 10 லட்சத்து, 54,278 வாக்காளர்கள் ஓட்டளித்து உள்ளனர். இந்த வகையில், 87.39 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.
அலட்சியம் முந்தைய தேர்தல்களை காட்டிலும், இம்முறை அதிக ஓட்டுப்பதிவு நடந்திருப்பதாக தேர்தல் அதிகாரிகள் பெருமையுடன் கூறினர்.தொகுதிகளிலும், 1 லட்சத்து, 53,479 வாக்காளர்கள் இம்முறை ஓட்டு செலுத்தவில்லை. அதிலும், குறிப்பாக தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரும் தபால் ஓட்டு செலுத்தாமல், அலட்சியம் காட்டியிருப்பது தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், அத்தியாவசிய பணியில் ஈடுபடுவோர், தேர்தல் பணியில் ஈபடுவோர், மாற்றுத்திறனாளிகள், முதியோர் உள்ளிட்டோர், தபால் ஓட்டு போட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஓட்டளிக்கவில்லை அரசு ஊழி யர்களுக்கு, பயிற்சி நடைபெறும் இடங்களிலும், போலீசாருக்கு கலெக்டர் அலுவலகம் என முக்கிய இடங்களிலும் தபால் ஓட்டு செலுத்த தேவையான வசதிகள் செய்யப்பட்டன.
மொத்தம், 4,754 அரசு ஊழியர்களில், 4,446 பேர் தபால் ஓட்டு செலுத்தி உள்ளனர்; 308 பேர் ஓட்டளிக்கவில்லை. அதேபால், 1,182 போலீசாரில், 1,014 பேர் ஓட்டளித்தனர்; மீதமுள்ள 168 போலீசார் ஓட்டளிக்கவில்லை.
அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் ரயில், போக்குவரத்து துறை ஊழியர்கள், மெட்ரோ, வானொலி என, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 426 பேர் தபால் ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், 355 பேர் தான் ஓட்டளித்தனர்; 71 பேர் ஓட்டளிக்கவில்லை.
இவ்வாறு, அரசு ஊழியர்கள், போலீசார், அத்தியாவசிய பணியாளர்கள் என, முக்கிய துறை ஊழியர்கள், 547 பேர் ஓட்டு செலுத்தாமல் அலட்சியமாக வீணடித்துள்ளனர்.
தேர்தல் அதிகாரிகள் அனைத்து வகையான வசதிகள், ஏற்பாடுகளை செய்திருந்த போதும் ஓட்டளிக்கவில்லை.
ஏற்கனவே, அரசு ஊழியர்களின் தபால் ஓட்டு செலுத்தும்போது பல்வேறு பிழை செய்வதன் காரணமாக, ஓட்டு எண்ணும்போது அவர்களின் ஓட்டுகள் தள்ளுபடி செய்யப்படுவது வழக்கம்.
இதனால், நுாற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள், தங்களின் ஓட்டுகளைகூட செலுத்த ஆர்வம் காட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது.
@block_B@ தபால் ஓட்டு செலுத்தாத அரசு ஊழிர்கள் மற்றும் போலீசார் விபரம் தொகுதி ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அத்தியாவசிய பணியாளர்கள் போலீசார் ஆலந்துார் 22 1 16 ஸ்ரீபெரும்புதுார் 66 9 63 உத்திரமேரூர் 120 43 38 காஞ்சிபுரம் 100 18 51 மொத்தம் 308 71 168block_B
மேலும்
-
போர் நிறுத்தம் எதிரொலி : ஈரான் தலைநகரில் 2 மாதங்களுக்கு பின் விமான நிலையம் திறப்பு
-
திருச்சூர் பூரம் திருவிழா துவக்கம்; யானை மீது பவனி வந்த பகவதி அம்மன்
-
மாலி நாட்டின் முக்கிய நகரங்களில் ராணுவம் - கிளர்ச்சியாளர்கள் மோதல்
-
கடை அருகே காயங்களுடன் இறந்து கிடந்த தொழிலாளி
-
வாலிபர் தற்கொலை
-
கிரைம் கார்னர்: ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய ரவுடி கைது