ராஜ்யசபாவில் தேஜ கூட்டணி பலம் அதிகரிப்பு

37

நமது டில்லி நிருபர்



கட்சி தாவல் எதிரொலியாக, ராஜ்யசபாவில் தேஜ கூட்டணி எம்பிக்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 123 எம்பிக்களின் எண்ணிக்கையை விட 17 பேர் அதிகமாக இருக்கின்றனர்.


@1brலோக்சபாவில் நிறைவேற்றப்படும் எந்தவொரு மசோதாவும் ராஜ்யசபாவில் நிறைவேற்றிய பிறகு தான் சட்டமாக உருமாற முடியும். இதற்கு இந்த சபையில் பெரும்பான்மை எம்பி.,க்கள் அவசியம். அரசியலமைப்பின்படி, ராஜ்யசபாவின் அதிகபட்ச எம்பிக்கள் எண்ணிக்கை 250.


இதில் 238 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்தும், 12 பேர் ஜனாதிபதியாலும் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் ஆறு ஆண்டுகள் பதவி வகிக்கின்றனர்.


தற்போது ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஏழு எம்பிக்கள் இணைந்துள்ளதன் மூலம், ராஜ்யசபாவில் பாஜவின் பலம் 113 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 142ஐ எட்டியுள்ளது.


ராஜ்யசபாவின் தற்போதைய மொத்த பலம் 244ஆக உள்ள நிலையில், பெரும்பான்மைக்குத் தேவையான 123 இடங்களைக் காட்டிலும் தேஜ கூட்டணியின் எம்பிக்கள் எண்ணிக்கை கூடுதலாக தான் 17 பேர் இருக்கின்றனர்.


கடந்த பல ஆண்டுகளாக, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் பாஜவில் இணைந்து வந்தாலும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 7 ராஜ்யசபா எம்.பி.க்கள் ஒரே நாளில் பா.ஜ.வில் இணைந்தது முக்கியமாக கருதப்படுகிறது.

Advertisement