சீட் மறுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு கட்சிப் பதவி; திருமா சமாளிப்பு

28

நமது நிருபர்



தேர்தலில் சீட் மறுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ்க்கு கட்சியில் பதவி வழங்கி, விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்து உள்ளார்.


@1brதமிழக சட்டசபை தேர்தலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தற்போது எம்எல்ஏக்களாக உள்ள எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பாபு ஆகிய 3 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளானது.


விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நிலவும் கடுமையான கோஷ்டி பூசலே இதற்கு காரணம் என்றும், கட்சி எம்எல்ஏக்கள் திமுகவுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. தங்கள் கட்சி எம்எல்ஏ ஷாநவாஸ், தனக்குத் தெரியாமல் திமுகவுடன் நேரடியாக பேசியதை, உறுதி செய்வது போல், திருமாவளவன் பேட்டி கொடுத்து இருந்தார்.


எனினும், எம்.எல்.ஏ.,க்கள் மூவருக்கு, மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு, எவ்வித உள்நோக்கமும் இல்லை என திருமா மீண்டும் மீண்டும் கூறி வந்தார். தற்போது சீட் மறுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு கட்சிப் பதவி அவர் வழங்கியுள்ளார்.


எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜிக்கு கட்சியில் மாநில பொருளாளர் பதவியும், எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ்க்கு மாநில முதன்மைச் செயலாளர் பதவியும் திருமாவளவன் வழங்கி உள்ளார். கோஷ்டி பூசல், அதிருப்தியை சமாளிக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கையை திரும்ப எடுத்துள்ளதாக கட்சியினர் கூறுகின்றனர்.

Advertisement