ஓட்டுக்கு பணம் பரிசு தரவில்லை சண்முகம் விளக்கம்

சென்னை: 'விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் ஓட்டுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுக்கப்படவில்லை' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவருடைய விளக்கம்:

கடந்த 23ம் தேதி, 'தினமலர்' நாளிதழில், 'அதிக தொகுதிகள் வென்று கொடுத்தால் மட்டுமே அமைச்சர் பதவி: மா.செ.,க்களிடம் பழனிசாமி கறார்' என்ற தலைப்பில் செய்தி வெளியானது.

வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பது போன்ற சட்டவிரோதச் செயல்களில், நான் ஈடுபட்டது போன்று, தவறாக சித்தரிக்கும் வகையில், அதில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. இதில் உண்மை இல்லை.

யூகத்தின் அடைப்படையிலேயே செய்தி வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பது போன்ற தேர்தல் முறைகேடுகளில், நான் ஈடுபடவில்லை. ஜனநாயக முறையிலேயே மக்களிடம் பிரசாரம் செய்து ஓட்டு சேகரித்தேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Advertisement