கடும் வெப்பத்தால் பழங்கள் வெம்பி அழுகுகிறது: வியாபாரிகள் கவலை
திருவாடானை: கடும் வெப்பம், அனல் காற்று வீசுவதால் கனிந்த பழங்கள் வெம்பி அழுகுவதால் பழ வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.திருவாடானை, தொண்டி பகுதியில் வெயிலின் தாக்கம் முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. காலை 10:00 மணிக்கே துவங்கும் வெயில் மதியம் உச்சத்தை எட்டி அனல் காற்றாக மாறுகிறது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. அனல் காற்று வீசுவதால் முதியவர்கள், குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
இந்த கடும் வெப்பம் மனிதர்கள் மட்டுமின்றி வியாபாரத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக பழ வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். வெயிலின் கொடுமையால் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள வாழைப்பழம் உள்ளிட்ட பழங்கள் சீக்கிரமே வெம்பி விடுகின்றன. வெப்பம் தாங்காமல் பழங்கள் குழைந்து போவதால் விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெயில் காரணமாக மக்கள் கடை வீதிக்கு வருவதை தவிர்ப்பதால் பழங்கள் விற்பனை ஆகாமல் உள்ளது. இந்த ஆண்டு வெயிலால் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
--
மேலும்
-
நகர பகுதியில் தெரு நாய்கள் அதிகரிப்பு; பொதுமக்கள் அச்சம்
-
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் ஆட்டோக்களால் டிராபிக் ஜாம்
-
தமிழ் சங்கங்களின் ஐம்பெரும் விழா
-
பெண் மீது பைக்கில் மோதிய வாலிபரை தாக்கிய 3 பேர் கைது
-
கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு ஜனன உற்சவ சிறப்பு பூஜை
-
கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா