கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் ஆட்டோக்களால் டிராபிக் ஜாம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பழைய பஸ் நிலையத்தை முற்றுகையிடும் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கள்ளக்குறிச்சி நகரம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. இதனை தீர்க்கும் வகையில் ஏமப்பேர் பகுதியில் புதிதாக பஸ் நிலையம் துவங்கப்பட்டது. பழைய பஸ் நிலையத்திலிருந்து புதிய பஸ் நிலையத்திற்கு தொடர் பஸ்கள் இயக்கப்படுவதுடன் சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால் போக்குவரத்து பாதிப்பு தீர்க்கப்படாமல் உள்ளது.

பஸ்களுடன் இணைந்து ஆட்டோக்காரர்களும் பழைய பஸ் நிலையம் அருகே வரிசையாகவும், சாலையில் நிறுத்துகின்றனர். ஆட்டோக்களின் அத்து மீறல்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

Advertisement