தமிழ் சங்கங்களின் ஐம்பெரும் விழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கல்லை சமூக நீதி சிந்தனையார்கள் தமிழ் பேரவை, தியாகதுருகம் பாரதியார் தமிழ் சங்கம், நெடுமானுார் பாரதியார் தமிழ் சங்கம் சார்பில், அம்பேத்கர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கி.வா.ஜெகந்நாதன், பாரதிதாசன் பிறந்த நாள், விருது வழங்கல் மற்றும் தமிழ் இலக்கிய தொடர் சொற்பொழிவு என ஐம்பெரும்விழா நடந்தது.

தியாகதுருகம் பாரதியார் தமிழ் சங்க தலைவர் துரைமுருகன் தலைமை தாங்கினார். நெடுமானுார் பாரதியார் தமிழ் சங்க தலைவர் கதிர்வேல், தியாகதுருகம் தமிழ் சங்க புரவலர் முரளி முன்னிலை வகித்தனர். தியாகதுருகம் பாரதியார் தமிழ் சங்க மகளிரணி செயலாளர் சுதாவேல்மணி வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் விஜயகுமார், கோமுகி மணியன் விருது வழங்கி வாழ்த்தினார்.

கவிஞர்கள் ஜெயராமன், தேவதிருவருள், கிருஷ்ணன், முத்தமிழ் முத்தன், மோகன், வேங்கட ரமேஷ்பாபு, செல்லமுத்து, ராமகிருஷ்ணன், குப்பனார் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய சொற்பொழிவாற்றினர். பழனி, ராமானுஜம், நடராஜன், ஆனந்தகுமார், மாரியம்மாள், பெருமாள், கலைமகள் காயத்ரி, ஆபீப்மீரான் இணைந்து கவியரங்கம் நடத்தினர். ரிஷிவந்தியம் தமிழ் சங்க செயலாளர் ராஜகோபால் நன்றி கூறினார்.

Advertisement