பெண் மீது பைக்கில் மோதிய வாலிபரை தாக்கிய 3 பேர் கைது
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே நடந்து சென்ற பெண் மீது பைக்கில் மோதிய நபரை தாக்கிய மூவரை போலீசார் கைது செய்து, 10 பேரை தேடி வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடமாமந்துார் கிராமத்தை சேர்ந்த காமராஜ் மகன் வைரமுத்து, 22; இவர் நேற்று அரும்புராம்பட்டில் நடந்த கோவில் திருவிழாவை பார்த்துவிட்டு பைக்கில் செல்லும்போது வசந்தா என்பவர் மீது மோதியுள்ளார்.
இதனை அறிந்த வசந்தா மருமகன் தட்சணாமூர்த்தி, உறவினர்கள் சம்பத், ராஜாமணி, சக்கரவர்த்தி, விஜி மற்றும் அடையாளம் தெரியாத நான்கு பேர் ஆகியோர் சேர்ந்து வைரமுத்துவை அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து வைரமுத்து கொடுத்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் தட்சிணாமூர்த்தி, 40; சக்கரவர்த்தி, 60; விஜி, 30; ஆகிய மூன்று பேரை கைது செய்து 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
போர் நிறுத்தம் குறித்து புடினுடன் ஆலோசிக்க திட்டம்; ரஷ்யா சென்றார் ஈரான் வெளியுறவு அமைச்சர்
-
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச்சூடு; அசராமல் சாலட் சாப்பிட்டவர் வீடியோ வைரல்
-
மனைவிக்கு விஜய் ரூ.12.6 கோடி கடன்: விசாரிக்க கோரிய வழக்கு தள்ளுபடி
-
மானாமதுரை சித்திரை விழா திருக்கல்யாணம்
-
ஒழுங்குமுறை விற்பனை கூடம் அதிகாரிகளை கண்டித்து மறியல்
-
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு