வேன் கவிழ்ந்து விபத்து ;சுற்றுலா பயணிகள் 15 பேர் காயம்
கூடலூர்: கும்பகோணத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 20 பேர், இன்று, காலை சுற்றுலா வாகனத்தில் ஊட்டி வந்து, அங்கிருந்து ஊட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக முதுமலை புலிகள் காப்பகம் நோக்கி சென்றனர்.
ஊசிமலை அருகே, மதியம் 2:00 மணிக்கு வேன் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 15 பேர் காயமடைந்தனர். அனைவரும் சிகிச்சைக்காக கூடலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நடுவட்டம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement