விளையாட்டு உலகின் புதிய சாதனைகள்

புதுடில்லி: விளையாட்டு அரங்கில் புதியதாக பல்வேறு உலக சாதனைகள் படைக்கப்படும். இதில் பல நீண்ட ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் நிலைத்து இருக்கும்.
இங்கிலாந்தின் லண்டனில், சர்வதேச மாரத்தான் ஓட்டம் நடந்தது. ஆண்கள் பிரிவில், 42.195 கி.மீ., துாரத்தை ஒரு மணி நேரம், 59 நிமிடம், 30 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்தார் நடப்பு சாம்பியன், கென்யாவின் செபாஸ்டியன் சாவே. இதையடுத்து, மாரத்தான் (42.195 கி.மீ.,) ஓட்டத்தை 2 மணி நேரத்திற்குள் கடந்த முதல் வீரர் என புதிய வரலாறு படைத்தார்.
இதற்கு முன், கென்யாவின் கெல்வின் கிப்துன் (2 மணி நேரம், 00.35 வினாடி) முதலிடத்தில் இருந்தார். லண்டன் மாரத்தானில் அசத்திய, எத்தியோபிய வீரர் யோமிப் கேஜெல்சா (ஒரு மணி நேரம், 59.41 வினாடி), கிப்துனை பின்தள்ளி, இரண்டாவது இடம் பெற்றார்.
பெண்கள் மாரத்தானில் கென்யாவின் ருத் செப்கெடிச் (2024ல், 2:09.56) 2024 முதல் சாதனையாளராக உள்ளார்.
பாவெல் கலக்கல்
ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் மைக் பாவெல் (அமெரிக்கா), 8.95 மீ., துாரம் தாண்டி, 23 ஆண்டு சாதனையை 1991ல் தகர்த்தார். முன்னதாக 1968ல் பாப் பியாமன் 8.90 மீ., (அமெரிக்கா) தாண்டி இருந்தார்.
டுப்ளான்டிஸ் மிரட்டல்
ஆண்களுக்கான போல் வால்ட் போட்டியில் உக்ரைனின் செர்ஜி புப்கா, 1993ல் 6.15 மீ., தாவி இருந்தார். 21 ஆண்டுக்குப் பின் பிரான்சின் ரெனாடு (6.16) இதை முறியடித்தார். 2020 முதல் சுவீடனின் டுப்ளான்டிஸ் (6.31) சாதனையாளராக உள்ளார்.
400 ரன்
டெஸ்ட் அரங்கில் 1958ல் வெஸ்ட் இண்டீசின் கேரி சோபர்ஸ், 365 ரன் (எதிர்-பாக்.,) எடுத்தார். 36 ஆண்டுக்குப் பின் இதை, சக வீரர் லாரா (375, 1994) தகர்த்தார்.
அடுத்த 9வது ஆண்டில் (2003) ஆஸ்திரேலியாவின் ஹைடன், 380 ரன் எடுத்து முந்தினார். 2004ல் மீண்டும் மிரட்டிய லாரா, 400 ரன் எடுத்து, டெஸ்டில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த சாதனையாளராக உள்ளார்.

73 ஆண்டு சாதனை
பாட்மின்டன் அரங்கில் ஆல் இங்கிலாந்து தொடரில் சாம்பியன் ஆன முதல் இந்தியர் பிரகாஷ் படுகோன் (1980). 21 ஆண்டுக்குப் பின், கோபிசந்த் (2001) சாதித்தார்.
* ஆண்கள் அணிகளுக்கு இடையிலான தாமஸ் கோப்பை பாட்மின்டன், 73 ஆண்டு வரலாற்றில், இந்தியா 2022ல் முதல் கோப்பை வென்றது.
* ஆசிய பாட்மின்டனில் 61 ஆண்டுக்குப் பின் (முன்னதாக 1965ல் தினேஷ் கண்ணா) பைனலுக்கு சென்ற இந்தியர் ஆனார் ஆயுஷ் ஷெட்டி (2026).
* பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் முதல் கோப்பை வென்ற இந்தியராக சிந்து (2019) உள்ளார். தவிர ஒலிம்பிக் அரங்கில் 2 பதக்கம் (2016ல் வெள்ளி, 2021ல் வெண்கலம்) வென்ற முதல் இந்திய பாட்மின்டன் நட்சத்திரமாக திகழ்கிறார்.
* 71 ஆண்டு வரலாற்றில், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை 2018-19ல் வென்றது இந்திய அணி.

Advertisement