அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

செய்யூர்:மேல்மருவத்துாரில் தேசிய நெடுஞ்சாலையிஙல் உள்ள கழிவுநீர் வடிகால்வாயில் 40வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீசார் மீட்டனர்.

மேல்மருவத்துார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரத் பெட்ரோலிய பங்க் எதிரே கழிவுநீர் வடிகால்வாய் உள்ளது.

இதில், அடையாளம் தெரியாத சடலம் இருப்பதைக் கண்ட அப்பகுதியினர் நேற்று போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பே ரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி ஆய்வு செய்ததில், நீல நிற சட்டை மற்றும் கருப்பு நிற பேன்ட் அணிந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண்சடலம் என தெரியவந்தது.

இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, உயிரிழந்த நபரின் விவரம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement