8.68 லட்சம் பேர் வாக்காளர் அட்டை பயன்படுத்தி ஓட்டளிப்பு :பிற வகை ஆவணங்களை பயன்படுத்திய 1.78 லட்சம் பேர்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளிலும் சேர்த்து, 8 லட்சத்து 68,076 வாக்காளர்கள் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி ஓட்டு செலுத்தியுள்ளனர்.

தமிழகம் முழுதும் நேற்று முன்தினம் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், காஞ்சிபுரம் என, நான்கு சட்டசபை தொகுதிகளிலும் தேர்தலுக்கான பல்வேறு ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டு, பிரச்னையின்றி 1,556 ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் நடத்தப்பட்டது.

மாவட்டம் முழுதும், 12 லட்சத்து 7,757 வாக்காளர்களில், 10 லட்சத்து 54,278 வாக்காளர்கள் ஓட்டளித்திருப்பதாகவும், இதன் ஓட்டுப்பதிவு சதவீதம், 87.39 என, தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

முந்தைய தேர்தல்களை காட்டிலும், இம்முறை அதிக ஓட்டுப்பதிவு நடந்திருப்பதாக தேர்தல் அதிகாரிகள் பெருமை பேசுகின்றனர்.

நான்கு சட்டசபை தொகுதிகளிலும், 1 லட்சத்து 53,479 வாக்காளர்கள் இம்முறை ஓட்டு செலுத்தவில்லை. அதிலும், குறிப்பாக தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரும் தபால் ஓட்டு செலுத்தாமல், அலட்சியம் காட்டியிருப்பது தெரியவந்துள்ளது.

ஓட்டுச்சாவடிக்கு நேரில் சென்று ஓட்டு செலுத்தியவர்களில், 8 லட்சத்து 68,076 வாக்காளர்கள், தங்களின் வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தியுள்ளனர். அதேபோல, 1 லட்சத்து 78,307 வாக்காளர்கள் ஆதார் அட்டை உள்ளிட்ட பிற வகையான ஆவணங்களை பயன்படுத்தி ஓட்டளித்துள்ளனர்.

@block_B@ ஓட்டுச்சாவடிக்கு நேரில் சென்று ஓட்டளித்த வாக்காளர்கள் பயன்படுத்திய ஆவணம் விபரம் தொகுதி வாக்காளர்கள் அடையாள அட்டை பிற வகையான ஆவணம் ஆலந்துார் 2,25,573 33,994 ஸ்ரீபெரும்புதுார் 2,78,940 41,107 உத்திரமேரூர் 1,76,485 47,520 காஞ்சிபுரம் 1,87,078 55,682 மொத்தம் 8,68,076 1,78,307block_B

Advertisement