பஸ் மோதி மூதாட்டி பலி
பெருங்களத்துார்: புதுபெருங்களத்துார், புத்தர் நகரைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி, 68. இவர், நேற்று காலை செங்கல்பட்டிற்கு செல்வதற்காக, பெருங்களத்துார் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார்.
அப்போது, தாம்பரத்தில் இருந்து மறைமலை நகர் நோக்கி சென்ற தடம் எண்: '118பி' என்ற அரசு பேருந்து, அவர் மீது மோதியது.
பலத்த காயமடைந்த மூதாட்டி, சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து வந்த போலீசார், மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இது குறித்து விசாரிக்கும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பேருந்து ஓட்டுநரான செம்பாக்கத்தைச் சேர்ந்த சரவணன், 54 என்பவரை, கைது செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சுவிஸ் விமானத்தில் திடீர் தீ... பயணிகள் 6 பேர் படுகாயம்; டில்லி விமான நிலையத்தில் பரபரப்பு
-
திரிணமுல் காங்கிரசின் அராஜக ஆட்சி; மம்தா அரசுக்கு ராகுல் கண்டிப்பு
-
2024 லோக்சபா தேர்தலை விட இம்முறை கூடுதலாக 50 லட்சம் பேர் ஓட்டளிப்பு
-
கொலம்பியாவில் பஸ்சில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி; 20 பேர் காயம்
-
கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி; ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்ட மக்கள்
-
உயிரியல் பூங்கா விலங்குகளை வெயிலில் இருந்து காக்க ஏற்பாடு
Advertisement
Advertisement