2024 லோக்சபா தேர்தலை விட இம்முறை கூடுதலாக 50 லட்சம் பேர் ஓட்டளிப்பு

6

நமது நிருபர்




கடந்த 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுடன் ஒப்பிடும் போது, இம்முறை நடந்த சட்டசபை தேர்தலில் கூடுதலாக 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஓட்டளித்துள்ளனர்.

லோக்சபா தேர்தல்களுடன் ஒப்பிடும் போது, சட்டசபை தேர்தல்களின் மீது மக்களின் ஆர்வம் எப்போதும் அதிகமாக இருந்து வருகிறது.


2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 3.30 கோடி பேர், 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 3.03 கோடி பேர், 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 3.67 கோடி பேர் ஓட்டளித்துள்ளனர்.

2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 4.06 கோடி பேர், 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 4.35 கோடி பேர், 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 4.33 கோடி பேர், 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 4.62 கோடி பேர் ஓட்டளித்துள்ளனர்.


2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 4.37 கோடி பேரும், இப்போதைய சட்டசபை தேர்தலில் 4.88 கோடி பேரும் ஓட்டளித்துள்ளனர். அதாவது, முந்தைய லோக்சபா தேர்தலுடன் ஒப்பிடுகையில், இம்முறை நடந்த சட்டசபை தேர்தலில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் கூடுதலாக ஓட்டளித்துள்ளனர்.
தமிழகத்தில் நடந்த தேர்தல்களில் ஓட்டுப்பதிவு

தேர்தல் ஆண்டு - ஓட்டளித்தவர் எண்ணிக்கை - சதவீதம்


* 2006 சட்டசபை - 3.30 கோடி பேர் - 70.82

* 2009 லோக்சபா - 3.03 கோடி பேர் - 72.98

* 2011 சட்டசபை - 3.67 கோடி பேர் - 78.29

* 2014 லோக்சபா - 4.06 கோடி பேர் - 73.74

* 2016 சட்டசபை - 4.35 கோடி பேர் - 74.84

* 2019 லோக்சபா -4.33 கோடி பேர் - 72.47

* 2021 சட்டசபை - 4.62 கோடி பேர் - 73.51

* 2024 லோக்சபா -4.37 கோடி பேர் - 70.06
* 2026 சட்டசபை - 4.88 கோடி பேர் - 85.15

Advertisement