உயிரியல் பூங்கா விலங்குகளை வெயிலில் இருந்து காக்க ஏற்பாடு
சேலம்,சேலம், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா, 31.73 ஹெக்டேரில் இயற்கை சூழலில் அமைந்துள்ளது. அங்கு கட மான், சம்பார் மான், புள்ளி மான், மயில்கள், வெள்ளை மயில்கள், முதலை, பெலிகான் பறவை, குரங்கு உள்ளிட்ட பல்வேறு விலங்குகள், அவற்றுக்கென உள்ள பிரத்யேக கூண்டுகளில் வைத்து பராமரிக்கப்படுகின்றன. தற்போது கோடை வெயில், 100 டிகிரி பாரன்ஹீட் அளவில் கொளுத்தி வருகிறது. இதனால் பூங்காவில் உள்ள உயிரினங்களை காக்க, சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக மான்கள் உள்ள பகுதியில் பசும்புற்களை கொண்டு நிழல் தரும் கூரைகள் அமைக்கப்பட்டு, நீர்ச்சத்து நிறைந்த தர்ப்பூசணி, வெள்ளரி பழங்கள் உணவாக வழங்கப்படுகின்றன. மயில்கள் உள்ள கூண்டுகளில், 'பாகர்' இயந்திரம் அமைத்து, செயற்கை மழை பொழிய வைக்கப்படுகிறது. இதனால் மயில்கள் மீது தண்ணீர் துளிகள் விழுந்து கொண்டே இருக்கும். கோடை காலம் முடியும் வரை அனைத்து வித விலங்குகளுக்கும் போதிய நிழல், தண்ணீர் கிடைப்பதை ஊழியர்கள் கண்காணித்து அடிக்கடி நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் வழங்கி வருவதாக
வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும்
-
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் ஆட்டோக்களால் டிராபிக் ஜாம்
-
தமிழ் சங்கங்களின் ஐம்பெரும் விழா
-
பெண் மீது பைக்கில் மோதிய வாலிபரை தாக்கிய 3 பேர் கைது
-
கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு ஜனன உற்சவ சிறப்பு பூஜை
-
கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா
-
கடுவனுாரில் இரைதேடி குவியும் பறவைகள்