கொலம்பியாவில் பஸ்சில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி; 20 பேர் காயம்
நமது நிருபர்
கொலம்பியாவில் பஸ்சில் குண்டு வெடித்ததில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.
தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவின் கவுகா நகரில் பஸ்சில் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட தாக்குதல் கவுகா நகர் கவர்னர் ஒக்டாவியோ குஸ்மான் வேதனை தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நாங்கள் உணரும் வலியை விவரிக்க வார்த்தைகள் போதாது.நாங்கள் சந்தித்து வரும் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள நடவடிக்கையை நாங்கள் கோருகிறோம்.வன்முறையாளர்கள் தொடர்ந்து அச்சத்தைத் திணிப்பதையும், அரசுக்கு சவால் விடுவதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
நாங்கள் எங்களின் முழுத் திறனுடன் இந்தச் சூழ்நிலையைக் கையாண்டு வருகிறோம். நாங்கள் உடனடியாக ஒரு பாதுகாப்புக் குழுவை சம்பவ இடத்திற்கு அனுபபி மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்தோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும்
-
ஏப்ரல் 30ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
அபுதாபியில் யுஏஇ அதிபரை சந்தித்தார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
-
கொழும்பு வந்த புத்த துறவிகளிடம் ரூ.110 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்
-
துப்பாக்கிச்சூடு சம்பவத்தை வெள்ளை மாளிகை பெண் அதிகாரி முன்கூட்டியே சொன்னது எப்படி?
-
அழுத்தத்திற்கு பயந்து பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்; ஈரான் அதிபர் திட்டவட்டம்
-
நீட் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியாகிறது