ரயிலில் மோதி வாலிபர் பலி
பண்ருட்டி: பண்ருட்டி அருகே ரயில் மோதி ஓருவர் பலியானது குறித்து கடலுார் ரயில்வே போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், திருவதிகை ரயில்வே காலனியை சேர்ந்தவர் வேலு. இவரது மகன் அஜித்,26; கூலி தொழிலாளி;
இவர் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11:35 மணியளவில், பண்ருட்டி ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தை கடந்தார்.
அப்போது அவ்வழியே சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி ரயில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் அஜித் மீது மோதியது. இதில் அஜீத் துாக்கியெறியப்பட்டு சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்து தகவலறிந்த கடலுார் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சுவிஸ் விமானத்தில் திடீர் தீ... பயணிகள் 6 பேர் படுகாயம்; டில்லி விமான நிலையத்தில் பரபரப்பு
-
திரிணமுல் காங்கிரசின் அராஜக ஆட்சி; மம்தா அரசுக்கு ராகுல் கண்டிப்பு
-
2024 லோக்சபா தேர்தலை விட இம்முறை கூடுதலாக 50 லட்சம் பேர் ஓட்டளிப்பு
-
கொலம்பியாவில் பஸ்சில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி; 20 பேர் காயம்
-
கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி; ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்ட மக்கள்
-
உயிரியல் பூங்கா விலங்குகளை வெயிலில் இருந்து காக்க ஏற்பாடு
Advertisement
Advertisement