வெயிலின் பிடியில் தகிக்கும் தமிழகம்; வேலூரில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு
சென்னை: தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் வெயில் வாட்டி எடுக்கிறது அதிகபட்சமாக வேலூரில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. கோடைக்கு முன்பே தகிக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரிக்கிறது. வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வதால் வீடுகளின் மின்நுகர்வு தேவையும் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் மின்தேவையும் அதிகரித்து காணப்படுகிறது.
இந் நிலையில், இன்று தமிழகத்தில் பெரும்பாலான நகரங்களில் அதிக வெப்பம் காணப்பட்டது. வேலூரில் இன்றைய அதிகபட்ச வெப்பநிலையானது 40.2 டிகிரி செல்சியசாக பதிவாகி இருக்கிறது. கடும் வெயிலை தாங்க முடியாமல் மக்கள் கடும் அவதி அடைந்தனர். வேலூருக்கு அடுத்தபடியாக கரூர் பரமத்தியில் 39.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொளுத்தியது.
தருமபுரி மற்றும் மதுரை விமான நிலையத்தில் தலா 39 டிகிரியும், திருச்சியில் 39.1 டிகிரி, ஈரோடு 39.2 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகி உள்ளது. மற்ற நகரங்களான சென்னை, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் ஆகிய நகரங்களிலும் வெப்பம் தகித்தது.
தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் இளநீர், நொங்கு, பழ ரசங்களை அருந்தி மக்கள் சூட்டை தணித்துக் கொண்டனர். அடுத்த சில நாட்கள் வரை இதே நிலைமை காணப்படும் என்பதால், வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள முற்பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியிடங்களுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
In the name of development!! Decultivation of trees in the name of highway and road extensions. Building construction approval of apartments at every corner. Global warming is what we d and not nature's fault.
சாலைகள் விரிவாக்கம் செய்யும் போது பெரியதவறிழைத்துவிட்டார்கள் .சாலையிலிருந்து மரங்களையெல்லாம் வேட்டிவ்வ்ழ்த்தியபோது ஈடான மரங்களை சாலையின் இருபுறமும் ஏற்படுத்த தவறி விட்டார்கள். 1970குமுன்னால் சாலையில் நடந்தால் சுமார் 100 மயில்கள்வரையிலும்கூட வெயில்படாமல் நடக்கலாம் .மரங்களினருமை புரியவில்லை .ஒவ்வொருவருக்கும் சுவாசிக்க 40 மரங்கள் தேவைப்படுவதாக கணக்கீடு உள்ளது .கொடியசைந்தால்தானே காற்றுவரும் .
மரம் மற்றும் இயற்கை கனிம வளங்களை அழித்துவிட்டாங்க. அதோட விளைவு advance ஆகவே வெயில் காலம் வந்துடுச்சு.மேலும்
-
சுவிஸ் விமானத்தில் திடீர் தீ... பயணிகள் 6 பேர் படுகாயம்; டில்லி விமான நிலையத்தில் பரபரப்பு
-
திரிணமுல் காங்கிரசின் அராஜக ஆட்சி; மம்தா அரசுக்கு ராகுல் கண்டிப்பு
-
2024 லோக்சபா தேர்தலை விட இம்முறை கூடுதலாக 50 லட்சம் பேர் ஓட்டளிப்பு
-
கொலம்பியாவில் பஸ்சில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி; 20 பேர் காயம்
-
கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி; ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்ட மக்கள்
-
உயிரியல் பூங்கா விலங்குகளை வெயிலில் இருந்து காக்க ஏற்பாடு