தினமும் தொடரும் போக்குவரத்து நெரிசலால் அவதி
திண்டுக்கல் காந்திஜி மார்க்கெட் செல்லும் மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்புகளாலும் போலீசார் கண்காணிப்பு இல்லாததாலும் இங்கு போக்குவரத்து நெரிசல் என்பது தீராத பிரச்னையாக உள்ளது. இது சில நேரங்களில் 1 மணி நேரத்திற்கு மேலாக தொடர்வதால் வாகனஓட்டிகள் மட்டுமன்றி பொது மக்களும் தினமும் பாதிப்பினை சந்திக்கின்றனர்.
.........
ஆக்கிரமிப்புக்கு எச்சரிக்கை
தேர்தல் பிரசாரம், தொடர் நிகழ்ச்சிகள், கோயில் திருவிழா உள்ளிட்ட காரணங்களால் நகருக்குள் சமீப நாட்களாக வாகன நெரிசல் அதிகமாகி உள்ளது. முக்கியமான இடங்களில் போக்குவரத்து போலீசார் பணி அமர்த்தப்பட்டு சீரான போக்குரவத்துக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரோட்டை ஆக்கிரமித்து டூவீலர், கார்கள் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். ஆக்கிரமிப்பு வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வள்ளியம்மாள் , போக்குவரத்து இன்ஸ்பெக்டர் , திண்டுக்கல்.