தேர்தலுக்கு பின் அரசியல் களம் மாறும்: திருமாமளவன்

1

தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் முழுதும் சுற்றி வந்தேன். அப்போது, பல்வேறு தரப்பட்ட மக்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடைய உணர்வுகளை உள் வாங்கினேன். அதை வைத்து சொல்கிறேன், தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தான் வெல்லும்.

இதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் தேவையில்லை. அதேநேரம், தேர்தலுக்குப் பின், தமிழக அரசியல் களம் மாறும் என சொல்லி இருந்தேன். உடனே, 'விஜயை மனதில் வைத்து தான் இப்படி சொன்னீர்களா' என கேட்கின்றனர்.

தேர்தலில், விஜயும் அவருடைய கட்சி வேட்பாளர்களும் பெறும் ஓட்டுகளை வைத்து, தமிழக அரசியல் களம் மாறும் என்ற பொருளில் தான் அப்படி சொல்லி இருந்தேன். தேர்தல் முடிவுகள் நான் சொல்லும் கருத்துகளை பிரதிபலிக்கலாம். நான் சொன்னதில், எவ்வித தவறும் இல்லை.

-- திருமாவளவன்

தலைவர், வி.சி.க.,

Advertisement