காட்டுப்பன்றிகளால் மிளகு கொடிகள் சேதம்

போடி: போடி மலைக் கிராமங்களில் மிளகு கொடிகளை காட்டுப் பன்றிகள் சேதம் ஏற்படுத்தி வருவதால் விளைந்த மிளகுவை பறிக்க முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

போடி அருகே குரங்கணி, முட்டம், முதுவாக்குடி, பிச்சாங்கரை, வடக்கு மலை உள்ளிட்ட பகுதியில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் காப்பி பயிரிட்டு உள்ளனர். கொடியில் மிளகு நன்கு வளர்ந்துள்ள நிலையில் மிளகு கொடியை வேரோடு சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விளைந்த மிளகை பறிக்க முடியாத நிலை உள்ளன. காட்டு பன்றிகள் தொந்தரவால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்து உள்ளனர். வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காத்திட குழிகள், சோலார் மின்மேலி அமைக்க விவசாயிகள் வனத்துறை யினரிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.

வன விலங்குகளை காப்பாற்றுவதோடு, பயிர்கள் சேதம் ஏற்படுவதை தடுக்க வனப்பகுதியை சுற்றி குழிகள், சோலார் மின்வேலி அமைக்க மாவட்ட வனத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement