'ஸ்டாலின் குடும்பத்திற்கு இனி முழு ஓய்வு தான்!'
சென்னை: ''ஸ்டாலின் குடும்பத்திற்கு இனி முழு ஓய்வு தான்,'' என, த.வெ.க., இணை பொதுச்செயலர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
அவரது பேட்டி:
நடந்து முடிந்திருப்பது வித்தியாசமான தேர்தல். அனைத்து தரப்பு மக்களும், ஒரே மாதிரி மாற்றத்தை விரும்பி ஓட்டளித்து உள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு, மக்கள் பெரும் ஆர்வத்துடன் ஓட்டளித்து உள்ளனர்.
தோல்வி பயத்தில் உள்ள தி.மு.க.,வினர், பல இடங்களில் வன்முறை யில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சைதாப்பேட்டையில் த.வெ.க., வேட்பாளரும், எழும்பூரில் த.வெ.க., நிர்வாகியும் தி.மு.க.,வினரால் தாக்கப்பட்டனர்.
திருச்சி கிழக்கு தொகுதியில், நள்ளிரவு 1:00 மணி வரை கள்ள ஓட்டு போட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காவல் துறையினர் இப்போதும் தி.மு.க.,வினர் செய்யும் அனைத்து தவறுகளுக்கும் துணை போகின்றனர். ஓட்டு போட மக்கள் வெளியூர்களுக்கு செல்லக்கூடாது என்பதற்காக, போதிய பஸ் வசதி செய்யப்படவில்லை.
பல இடங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. குறைந்தது 20 லட்சம் பேரை ஓட்டளிக்கச் செல்லாமல் தடுத்து விட்டனர்.
ஆனால், மக்கள் எதிர்பார்த்த விடுதலை, வரும் 4ம் தேதி கிடைக்கும். முதல்வர் ஸ்டாலின் குடும்பம் செய்யும் ஒரே வேலை, தேர்தல் பிரசாரம் தான். அது முடிந்ததும், சுற்றுலா சென்று விடுவர்.
தி.மு.க., இனி எப்போதும் ஆட்சிக்கு வராது. ஸ்டாலின் குடும்பத்திற்கு இனி முழு ஓய்வு தான்.
த.வெ.க., அமைச்சரவை என பொய் செய்தியை, தி.மு.க., தான் பரப்பி வருகிறது.
தன் தந்தை ராஜிவ் மரணத்தில் சம்பந்தப்பட்ட தி.மு.க.,வுடன் எந்த உறவும் வைத்துக்கொள்ள ராகுல் விரும்பியதில்லை. தி.மு.க., மீது அவருக்கு நம்பிக்கையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முழு ஓய்வா? கோர்ட்டு ஜெயிலெல்லாம் என்னவாச்சு. மூடிட்டாங்களா?