வீரராகவ பெருமாள் கோவிலில் நாளை மறுநாள் தேரோட்டம்
திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள, 108 திவ்யதேசங்களில் ஒன்றான வீரராகவ பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோத்சவ விழா, கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
மே 1ம் தேதி வரை நடைபெறும் பிரம்மோத்சவ விழா நாட்களில், தினமும் காலை - மாலை வீரராகவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந் து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
பிரம்மோத்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா, நாளை மறுநாள் காலை 7:00 மணிக்கு கோலாகலமாக நடக்கிறது. வரும் 30ம் தேதி தீர்த்தவாரியும், மே 1ம் தேதி கண்ணாடி பல்லக்கிலும், உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள்கிறார்.
பிரம்மோத்சவம் ஆர்.கே.பேட்டை அடுத்த பெரிய நாகபூண்டியில் அமைந்துள்ள நாகவல்லி சமேத நாகேஸ்வரர் கோவிலில், கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோத்சவம் துவங்கியது.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, நாக வாகனத்தில் சயன கோலத்தில் நாகவல்லி சமேத நாகேஸ்வரர் வீதியுலா வந்தார். பிரம்மோத்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா, நாளை நடைபெற உள்ளது. மே 5ம் தேதி கேடய உத்சவத்துடன் பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.
மேலும்
-
'நாட்டின் கோதுமை உற்பத்தி நிலையாகவே உள்ளது'
-
பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து விரைவில் பேச்சு
-
ரூ.8.18 லட்சம் கோடிக்கு அன்னிய நேரடி முதலீடு
-
ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு மத்திய அரசு புதிய விதிகள் வெளியீடு
-
தெரியாத கணக்கில் இருந்து பணம் வந்தால் ஆபத்தா?
-
மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்