மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் காவிரி நீர் சேமிக்கப்படுகிறது. இந்த நீரில் மீன்கள் வளர்க்கப்படுகிறது. வளர்க்கப்படும் மீன்களை, உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று பிடித்துக்கொண்டு வந்து கட்டளை வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்கின்றனர்.

நேற்று, விடுமுறை தினம் என்பதால் மீன் விற்பனை மும்முரமாக நடந்தது. இதில், ஜிலேபி மீன், ஒரு கிலோ, 150 ரூபாய், கெண்டை, 90 ரூபாய், கொக்கு மீன், 250 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. கரூர், புலியூர், சேங்கல், திருக்காம்புலியூர், காந்திகிராமம், லாலாப்பேட்டை, குளித்தலை பகுதிகளை சேர்ந்த மக்கள், அதிகாலை முதலே வந்து ஆர்டர் செய்து மீன்களை வாங்கி சென்றனர். நேற்று, 300 கிலோ வரை மீன்கள் விற்பனை செய்யப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Advertisement