வீரராகவபுரம் மாதா கோவில் ஏரியில் மண் திருட்டு ஆளுங்கட்சியினருடன் கைகோர்த்து அதிகாரிகள் அட்டூழியம்
திருவாலங்காடு: மாதா கோவில் ஏரியில், ஆளுங்கட்சியை சேர்ந்த பிரமுகர் மண் திருட்டில் ஈடுபடுவதாகவும், அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் அவர்களுடன் கைகோர்த்துக்கொண்டு அட்டூழியம் செய்வதாகவும் வீரராகவபுரம் மக்கள் புலம்புகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது வீரராகவபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மாதா கோவில் கிராமத்தில், ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில், 25 ஏக்கர் பரப்பளவிலான ஏரி உள்ளது.
இந்த ஏரியில், சில நாட்களாக பொக்லைன் இயந்திரம் மூலம் மண் திருட்டு நடந்து வந்துள்ளது. கோடைக்காலம் என்பதால், ஏரி நீர் வற்றிய நிலையில், இதை சாதகமாக பயன்படுத்திய தி.மு.க., பிரமுகர், ஏரியில் அனுமதியின்றி 5 அடி ஆழம், 30 அடி அகலத்திற்கு மண் திருடியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, கிராம மக்கள், சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த நிலையில், அவர்கள் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, அப்பகுதிமக்கள் கூறியதாவது: ஏரியில் இரு ந்து திருடப்படும் மண், புதிய வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் நிறுவன கட்டுமானங்கள், வீட்டுமனை பிரிவுகள் ஆகியவற்றின் தரைமட்ட பகுதியை சமன் செய்ய பயன் படுத்தப்படுகிறது.
ஒரு டிராக்டர் லோடு, 3,000 - 4,000 ரூபாய்க்கு விற்கின்றனர். மண் எடுக்கப்பட்ட பள்ளங்களில், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் மற்றும் வனவிலங்குகள் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, திருவாலங்காடு பகுதிகளில் மண் திருட்டு அதிகரித்துள்ளதால், இயற்கை வளங்களை பாதுகாக்க, மாவட்ட நிர்வாகம் சம் பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
நகர பகுதியில் தெரு நாய்கள் அதிகரிப்பு; பொதுமக்கள் அச்சம்
-
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் ஆட்டோக்களால் டிராபிக் ஜாம்
-
தமிழ் சங்கங்களின் ஐம்பெரும் விழா
-
பெண் மீது பைக்கில் மோதிய வாலிபரை தாக்கிய 3 பேர் கைது
-
கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு ஜனன உற்சவ சிறப்பு பூஜை
-
கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா