குப்பை வண்டி நிறுத்தும் இடமான வங்கனுார் கிளை நுாலகம்
ஆர்.கே.பேட்டை: வங்கனுாரில் செயல்பட்டு வந்த பழமையான நுாலக கட்டடம், தற்போது குப்பை வண்டிகள் நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டுள்ளதால், வாசகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம் வங்கனுார் ஊராட்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள சின்ன குளக்கரையில், கிளை நுாலகம் செயல்பட்டு வந்தது.
நெசவாளர்கள் அதிகளவில் வசிக்கும் வங்கனுாரை சேர்ந்தவர்கள், ஓய்வு நேரத்தில் இந்த நுாலகத்தில் படித்து பயனடைந்து வந்தனர்.
குளக்கரையில் அமைதியான சூழலில் அமைந்திருந்த இந்த நுாலகத்தில் படித்த மாணவர்கள் பலரும், தற்போது உயர் பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், இந்த நுாலக கட்டடம் பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்டது.
அதன்பின், பராமரிப்பின்றி சீரழிந்து கிடந்தது. தற்போது, முற்றிலுமாக இடித்து அகற்றப்பட்டு, ஊராட்சியின் குப்பை வண்டிகளை நிறுத்தி வைக்கும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. அறிவை வளர்க்க உதவிய நுாலகம், இன்று குப்பை வண்டிகளின் கிடங்காக மாறியுள்ளதால், வாசகர்கள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, புதிதாக நுாலகம் கட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
நகர பகுதியில் தெரு நாய்கள் அதிகரிப்பு; பொதுமக்கள் அச்சம்
-
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் ஆட்டோக்களால் டிராபிக் ஜாம்
-
தமிழ் சங்கங்களின் ஐம்பெரும் விழா
-
பெண் மீது பைக்கில் மோதிய வாலிபரை தாக்கிய 3 பேர் கைது
-
கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு ஜனன உற்சவ சிறப்பு பூஜை
-
கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா