பாலாஜி, ஆளூர் ஷாநவாசுக்கு வி.சி.க.,வில் முக்கிய பொறுப்பு
சென்னை: தேர்தலில், போட்டியிட 'சீட்' மறுக்கப்பட்ட எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் ஆகியோருக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியில், முக்கிய பதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.
தி.மு.க., கூட்டணியில் உள்ள வி.சி.க.,வுக்கு, சட்டசபை தேர்தலில் எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இவற்றில், ஏற்கனவே எம்.எல்.ஏ.,க்களாக இருக்கும் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட 'சீட்' மறுக்கப்பட்டது.
இதனால், மூவரும் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்தனர். அவர்களை சமாதானப்படுத்தும் வகையில், இருவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகளை, வி.சி.க., தலைவர் திருமாவளவன் வழங்கியுள்ளார்.
துணை பொதுச்செயலராக இருக்கும் பாலாஜியை, மாநில பொருளாளராக நியமித்து உ ள்ளார். அதேபோல், ஆளூர் ஷாநவாசுக்கு, கட்சியின் மாநில முதன்மை செயலர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை யில் நேற்று திருமாவளவனை சந்தித்து பாலாஜி வாழ்த்து பெற்றார். புதிய பொறுப்பு வழங்கியதற்காக, திருமாவளவனுக்கு ஆளூர் ஷாநவாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
இனி வயசுக்கு வந்தா என்ன..வராக்கட்டி என்ன...4ம்தேதி தெரிந்திடும்.மேலும்
-
நகர பகுதியில் தெரு நாய்கள் அதிகரிப்பு; பொதுமக்கள் அச்சம்
-
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் ஆட்டோக்களால் டிராபிக் ஜாம்
-
தமிழ் சங்கங்களின் ஐம்பெரும் விழா
-
பெண் மீது பைக்கில் மோதிய வாலிபரை தாக்கிய 3 பேர் கைது
-
கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு ஜனன உற்சவ சிறப்பு பூஜை
-
கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா