ரவுடிக்கு வெட்டு 3 பேருக்கு வலை

மேட்டூர், மேட்டூர், கருமலைக்கூடல், சின்னகாவூர், கிழக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில், 42. இவரது பெயர், கருமலைக்கூடல் ஸ்டேஷனில் ரவுடி பட்டியலில் உள்ளது. நேற்று மதியம், 3:00 மணிக்கு அப்பகுதியில் உள்ள கல்குவாரி அருகே செந்தில், சின்னகாவூரை சேர்ந்த நண்பர்கள் கார்த்திக், 21, நோபல், 22, ஆகியோர் மது அருந்தினர்.

அப்போது கார்த்திக், நோபல் ஆகியோர், 'என் மாமன் அழகு தம்பிதுரையை எதிர்த்து பேசுவீயா' என கேட்டு, கத்தியால் செந்திலின் இடது கை மணிக்கட்டு, தோள்பட்டை, கண்புருவம் மீது வெட்டி விட்டு தலைமறைவாகினர். படுகாயம் அடைந்த செந்திலை, கருமலைக்கூடல் போலீசார் மீட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து கார்த்திக், நோபல், அழகுதம்பிதுரை ஆகியோரை தேடுகின்றனர்.

Advertisement