ஊராட்சிக்கோட்டை கதவணை பராமரிப்பு பணி தொடக்கம்
மேட்டூர், மேட்டூர் அணை அடிவாரம் முதல் கரூர் வரை, காவிரியின் குறுக்கே, 10 கி.மீ.,க்கு, 1 வீதம், செக்கானுார், நெருஞ்சிப்பேட்டை, குதிரைக்கல்மேடு, ஊராட்சிக்கோட்டை, சமயசங்கிலி, வெண்டிபாளையம், சோளசிராமணி ஆகிய இடங்களில் கதவணை மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு கதவணையிலும், 15 முதல், 18 மதகுகள் உள்ளன. அதில் தலா, 0.5 டி.எம்.சி., நீரை, 18 ஷட்டர்கள் தாங்கி நிற்கின்றன.
கதவணைகளில் தலா, 30 வீதம், 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய, மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் குறைந்தபட்சம், 18,000 கனஅடி நீர், அணையில் இருந்து வெளியேற்ற வேண்டும். ஆனால் தற்போது காவிரி கரையோர மாவட்ட குடிநீர் தேவைக்கு அணையில் இருந்து, 1,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதற்கேற்ப கோடைகாலத்தில் பராமரிப்பு பணி நடக்கும். அதன்படி சோளசிராமணி, வெண்டிபாளையம், சமயசங்கிலி கதவணை மின் உற்பத்தி நிலையங்களில் பராமரிப்பு பணி தொடங்கி முடிந்துவிட்டது. இந்நிலையில் நேற்று ஊராட்சிக்கோட்டை கதவணையில் பராமரிப்பு தொடங்கி, வரும் மே, 3 வரை நடக்கிறது. தொடர்ந்து மே, 4 முதல், 25 வரை குதிரைக்கல்மேடு கதவணையிலும், மே, 26 முதல், ஜூன் 2 வரை நெருஞ்சிப்பேட்டையிலும், ஜூன், 3 முதல், 11 வரை, செக்கானுார் கதவணையிலும் பராமரிப்பு பணி நடக்க உள்ளது.
மேலும்
-
தமிழ் சங்கங்களின் ஐம்பெரும் விழா
-
பெண் மீது பைக்கில் மோதிய வாலிபரை தாக்கிய 3 பேர் கைது
-
கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு ஜனன உற்சவ சிறப்பு பூஜை
-
கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா
-
கடுவனுாரில் இரைதேடி குவியும் பறவைகள்
-
கூத்தாண்டவர் கோவிலில் நகை திருட்டு: ஆசாமிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு