கூத்தாண்டவர் கோவிலில் நகை திருட்டு: ஆசாமிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு

உளுந்துார்பேட்டை: கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் 23 சவரன் சுவாமி நகை திருடிய மர்ம நபர்களை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடுதல் பணி நடக்கிறது.

உளுந்துார்பேட்டை தாலுகா கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில், பூசாரி கூத்தையன் 60, அவரது மகன் சரத்குமார், 30; ஆகியோர் நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு பூஜையை முடித்துவிட்டு, கோவில் மூலவர் அறையை பக்தர்கள் தரிசனத்திற்கு திறந்து வைத்துவிட்டு சென்றனர்.

பின்னர் காலை 8.30 மணிக்கு திரும்பி வந்து பார்த்தபோது, மூலவர் சிலையில் இருந்த 23 சவரன் நகை திருடு போயிருந்தது. இது குறித்து திருநாவலுார் இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து, சி.சி.டி.வி., பதிவுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் டி.எஸ்.பி., அசோகன் மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் சிவகாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Advertisement