கணவர் சாவில் சந்தேகம்: விசாரிக்க மனைவி புகார்



மேட்டூர், மேட்டூர், தொட்டில்பட்டி, கிருஷ்ணசாமி தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி வசந்தகுமார், 30. இவரது மனைவி தரணிதேவி, 24. இவர் கடந்த, 22ல், பவானியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். வீட்டில் வசந்தகுமார் தனியே இருந்தார்.


நேற்று முன்தினம் பவானி வருவதாக, வசந்தகுமார், மொபைல் போனில் மனைவி

யிடம் தெரிவித்தார். ஆனால் அங்கு செல்லவில்லை. இதனால் நேற்று காலை, 10:00 மணிக்கு, தரணிதேவி மொபைலில் வசந்தகுமாரை தொடர்பு கொண்டார். அவர் போனை எடுக்கவில்லை. சந்தேகம் அடைந்த தரணிதேவி, மதியம், 1:00 மணிக்கு தொட்டில்பட்டியிலுள்ள வீட்டுக்கு வந்தார். அங்கு வசந்தகுமார் மயங்கி கிடந்ததோடு, மூக்கில் ரத்தம் வழிந்திருந்தது.


பின் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக, தரணிதேவி புகார்படி கருமலைக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement